இல்லத்தரசிகளுக்கு வருடத்துக்கு 3 கேஸ் சிலிண்டர்களை இலவசமாக தர அரசு முடிவு செய்திருக்கிறது.
பெண்களுக்கு இலவச சிலிண்டர் :
உத்திர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றது. கோவாவில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து உள்ளது. தேர்தலின்போது பாஜக தனது தேர்தல் அறிக்கையில், பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தது. அதில் விவசாயிகளுக்கும் பாசனத்திற்காக இலவச மின்சாரம் வழங்கப்படும்.

விதவைகளுக்கான மாத ஓய்வூதியம் 800 ரூபாயிலிருந்து 1500 ஆக உயர்த்தப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் 1500 ஆக உயர்த்தப்படும். ஹோலி மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு இலவசமாக 2 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்.
60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டம் கொண்டு வரப்படும். மேலும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச இருசக்கர வாகனம் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் போன்ற முக்கிய அறிவிப்புகள் வெளியிட்டது.
வருடத்துக்கு 3 சிலிண்டர் :

கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் நேற்று இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் எட்டு எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். கோவா முதல்வரான பிரமோத் சாவந்த் தனது ட்விட்டர் பதிவில், புதிய நிதியாண்டு முதல், 3 இலவச சிலிண்டர் விநியோக திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பெண்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
