Asianet News TamilAsianet News Tamil

2-ம் கட்ட கருப்பு பண ஆப்ரேஷன் - 5.56 லட்சம் பேர் சிக்கினர்....

2nd Block Black Operation Cleaner operation has revealed the inconsistencies in the preliminary forecasts of 5.56 lakh invented
 2nd Block Black Operation Cleaner operation has revealed the inconsistencies in the preliminary forecasts of 5.56 lakh invented
Author
First Published Jul 14, 2017, 9:50 PM IST


மத்தியஅரசின் ரூபாய் நோட்டு தடைக்கு பின், வருமான வரித்துறை நடத்திய 2-ம் கட்ட கருப்புபண ஆப்ரேஷன் கிளீன் நடவடிக்கையில் வருமானவரி தாக்கலில் முன்னுக்கு முன் முரணாக விவரங்களை தெரிவித்த 5.56 லட்சம் பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் கருப்புபணம், கள்ளநோட்டுகளை ஒழிக்கும் நோக்கில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து செல்லாத ரூபாய் நோட்டுகளை தபால்நிலையம், வங்கிகளில் மாற்றிக்கொள்ள 50 நாட்களை மத்திய அரசு அவகாசம் வழங்கியது. இதில் ரூ.2 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்பவர்கள் உரிய விவரங்களை தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, வங்கிகளில் அதிகமான பணத்தை டெபாசிட் செய்தவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் கடந்த ஜனவரி 31-ந்தேதி ‘ஆப்ரேஷன் கிளீன் மணி’ என்ற திட்டத்தை வருமானவரித் துறை தொடங்கினர்.

இதன்படி, அனைத்து வங்கிகளிடம் இருந்து, நிதிப் பரிமாற்ற விவரங்களைப் பெற்று, சந்தேகத்துக்கு உரிய வகையில் பணப்பரிமாற்றம் செய்த  17.92 லட்சம் பேருக்குநோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதில் 9.72 லட்சம் பேர் மின்அஞ்சல், எஸ்.எம்.எஸ். மூலமும் பதில் அனுப்பினர்.

இதில் இன்னும் 1.04 லட்சம் பேரிடம் இருந்து முறையான விவரங்கள் இன்னும் வருமான வரித்துறையினருக்கு வந்து சேரவில்லை.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் கட்ட ஆப்ரேஷன் கிளீன் மணி நடவடிக்கையை வருமான வரித்துறை தொடங்கியது. அது குறித்து வருமான வரித்துறை நேற்று வௌியிட்ட அறிவிப்்பில் கூறியிருப்பதாவது-

கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் கட்ட ஆப்ரேஷன் கிளீன் மணி நடவடிக்கையை வருமான வரித்துறை தொடங்கியது. இதற்காக எஸ்.எப்.டி. எனப்படும் நிதிப் பரிமாற்றங்களுக்கான விவரங்களை வங்கிகளிடம் இருந்து பெற்று சந்தேகத்துக்குரிய நபர்களின் வங்கிக் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டது.

இதில் வருமானவரி தாக்கல் செய்த 5.56 லட்சம் பேர் ரூபாய் நோட்டு தடைக்குபின், வங்கிகளில் செய்த டெபாசிட்களில் நிலையற்ற, ஒழுங்கின்மை காணப்படுகிறது. இதையடுத்து, அவர்களுக்கு மின்அஞ்சல், எஸ்.எம்.எஸ். மூலம் நோட்டீஸ்அனுப்பப்பட்டு பதில் கோரப்பட்டுள்ளது.

2-ம் கட்ட ஆப்ரேஷனில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனிநபர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதில் 1,300 பேர் மிகவும் அதிகமான பணத்தை டெபாசிட்செய்துள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios