அட்டபோல் இறந்ததை அடுத்து பட்டினியாக இருந்த அந்த நாய்கள் அவரது இடது காலைக் கடித்துத் தின்று உயிர் பிழைத்து இருந்ததாகக் கூறப்படுகிறது. அட்டாபோல் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் எனச் சொல்லப்படுகிறது.

பாங்காக்கின் க்லாங் சாம் வா மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் பல நாட்களாக அடைபட்டுக் கிடந்த 28 நாய்கள் மீட்கப்பட்டதை அடுத்து, அவை வீட்டு உரிமையாளரின் காலைத் தின்று உயிர் பிழைத்து இருந்தது தெரியவந்துள்ளது.

62 வயதான அட்டபோல் சரோன்பிதக் என்பவர் தனது வீட்டில் பல நாய்களை வளர்த்து வந்திருக்கிறார். அடிக்கடி நாய்களுடன் வெளியே சென்று வருவது வழக்கம் என்று கூறப்படுகிறது. ஆனால் அவரது கார் பல நாட்களாக எங்கும் செல்லாமல் வீட்டிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை அக்கம்பக்கத்தினர் கவனித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வீட்டிற்குள் சென்று பார்த்த போலீசார் சனிக்கிழமையன்று அவர் வீட்டில் இறந்து கிடப்பதைப் பார்த்தனர். அவரது வீட்டில் 28 நாய்கள் பட்டினியாக அடைபட்டுக் கிடந்துள்ளன. அவற்றில் பல சிஹுவாவா மற்றும் ஷிஹ் ட்ஸு இன நாய்கள் என்று கூறப்படுகிறது.

Earn on Instagram: இன்ஸ்டாகிராம் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? ஈசியான 5 வழிகள் இதோ!

அட்டபோல் இறந்ததை அடுத்து பட்டினியாக இருந்த அந்த நாய்கள் அவரது இடது காலைக் கடித்துத் தின்று உயிர் பிழைத்து இருந்ததாகக் கூறப்படுகிறது. அட்டாபோல் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் எனச் சொல்லப்படுகிறது.

மீட்கப்பட்ட நாய்கள் அட்டாபோலின் வீட்டில் சிக்கி ஒரு வாரத்திற்கும் மேலாக உணவு இல்லாமல் இருந்துள்ளன. வீடு முழுவதும் குப்பைகளும் நாய் மலமும் சிதறிக் கிடந்துள்ளன. வீட்டில் 30 நாய்கள் இருந்ததாகவும், அவற்றில் இரண்டு நாய்கள் பட்டினியால் செத்துப்போய்விட்டன என்றும் அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

200 கிலோ தங்க நகைகளை அணிந்து நடித்த ஐஸ்வர்யா ராய்! டிசைன் செய்தவர்கள் யார் தெரியுமா?