Andaman Nicobar Islands: அந்தமான் நிகோபாரின் 21 தீவுகளுக்குப் பெயர் சூட்டும் பிரதமர் மோடி!
அந்தமான் நிகோபாரின் பெயரிடப்படாத 21 பெரிய தீவுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 23ஆம் தேதி பெயர் சூட்டுகிறார்.
அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்தின் பகுதியாக உள்ள தீவுகளில் இதுவரை பெயரிடப்படாமல் உள்ள 21 பெரிய தீவுகள் புதிதாக பெயர்சூட்டப்பட உள்ளன. ஜனவரி 23ஆம் தேதி காலை 11 மணிக்குத் தொடங்கும் இதற்கான விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் கலந்துகொள்கிறார்.
இந்த விழாவின்போது 21 பேருக்கு பரம் வீர் சக்ரா விருதுகளையும் பிரதமர் மோடி வழங்க உள்ளார். இந்த விருதைப் பெறும் 21 பேரின் பெயர்களே தீவுகளின் பெயராக அமைய உள்ளன.
இந்நிகழ்ச்சியின்போது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நினைவாக அவர் பெயரிலான தீவில் அமைக்கப்பட இருக்கும் நினைவகத்தின் மாதிரி வடிவத்தையும் பிரதமர் மோடி திறந்து வைப்பார்.
இந்தியா மீது தண்ணீர் போர் தொடுக்க தயார் ஆகும் சீனா
2018ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அந்தமான் நிகோபார் தீவுகளுக்குச் சென்றபோது அங்குள்ள ரோஸ் ஐலேண்ட் என்ற தீவுக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பெயர் சூட்டப்பட்டது. நீல் தீவு, ஹேவ்லாக் தீவு ஆகியவையும் ஷாஹீத் தீவு, சுயராஜ்ஜியத் தீவு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டன.
பரம் வீர் சக்ரா விருது பெற இருப்பவர்கள் விவரம்:
மேஜர் சோம்நாத் சர்மா, சுபேதார் ஹானி கேப்டன் கரம் சிங், 2வது லெப்டினன்ட் ராம ரகோபா ரானே, நாயக் ஜதுநாத் சிங், மேஜர் பிரு சிங், கேப்டன் ஜிஎஸ் சலாரியா, லெப்டினன்ட் கர்னல் தன்சிங் தாபா, சுபேதார் ஜோகிந்தர் சிங், மேஜர் ஷைத்தான் சிங், அப்துல் ஹமீத், லெப்டினன்ட் கர்னல் அர்தேஷிர் புர்சோர்ஜி தாராபூர், லான்ஸ் நாயக் ஆல்பர்ட் எக்கா, மேஜர் ஹோஷியார் சிங், 2வது லெப்டினன்ட் அருண் கேத்ரபால், பறக்கும் படை அதிகாரி நிர்மல்ஜித் சிங் செகோன், மேஜர் ராமசுவாமி பரமேஸ்வரன், நைப் சுபேதார் பனா சிங், கேப்டன் விக்ரம் பத்ரா, லெப்டினன்ட் மனோஜ் குமார் பாண்டே, சுபேதார் மேஜர் சஞ்சய் குமார், மற்றும் ஓய்வுபெற்ற சுபேதார் மேஜர் (ஹானி கேப்டன்) கிரெனேடியர் யோகேந்திர சிங் யாதவ்
இந்த 21 பேரும் பரம் வீர் சக்ரா விருது பெறுகிறார்கள். அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட பெயரிடப்படாத 21 தீவுகள் ஜனவரி 23ஆம் தேதி முதல் இவர்கள் பெயரால் அழைக்கப்படும்.