1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என அறிவித்த மத்திய அரசு பொதுமக்கள் தங்களிடம் உள்ள பணத்தை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்தது. முதலில் தினம் 4000 ரூபாய் மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்தவர்கள் பின்னர் ,4500 ரூபாயாக உயர்த்தப்பட்டது. 

பணத்தை மாற்ற நாடெங்கும் வங்கிகள் முன்பு பொதுமக்கள் கூட்டம் திரண்டு நின்றது. யாரும் வேலைக்கு கூட செல்ல முடியாத நிலை. இந்நிலையில் மக்கள் தினசரி 4500 ரூபாயை மாற்றி எந்த செலவுகளை செய்ய முடியும் என்று பொதுமக்கள் கொந்தளித்து வந்த நிலையில் பொதுமக்கள் அதிக அளவில் வங்கிகளில் கூடுவதை தடுக்க , திடீரென அந்த அளவை ரூ.2000 ஆக குறைத்தனர். இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

கைவிரலில் மை வைப்போம் என்று அறிவித்துள்ள மத்திய அரசால் ஒரு தெளிவான நிலையை எடுக்க முடியவில்லை. இதனால் கைவிரலில் மை வைக்கப்பட்டவர்கள் பணம் எடுக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. 

இதனிடையே பொதுமக்கள் கொந்தளிப்பை குறைக்கவும் கும்பலாக கூடும் நிலை மாற்றவும் வங்கிகளுக்கு பொதுமக்கள் வராமல் இருக்க ரூ. 2000 வங்கிகளில் மாற்றலாம் என்ற அறிவிப்பையும் ரத்து செய்யலாமா என மத்திய அரசு யோசித்து வருகிறது என்று கூறப்படுகிறது.

விரைவில் அதற்கான அறிவிப்பும் வரலாம் , பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து ஏடிம் மூலம் எடுக்க வைக்கும் முறையை யோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே ஏடிஎம்மில் நிற்கும் கூட்டம் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது