Asianet News TamilAsianet News Tamil

Earthquake : அந்தமான் தீவில் அடுத்தடுத்து 20 முறை நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி..!

Earthquake : Jammu & Kashmir and Port Blair, Andaman and Nicobar  அந்தமான் தீவில் 20 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

20 consecutive earthquakes in Andaman Island.. Tsunami warning
Author
andaman, First Published Jul 5, 2022, 8:30 AM IST

அந்தமான் தீவில் 20 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அந்தமான் நிகோபார் தீவுப் பகுதிகளில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முதல் இன்று அதிகாலை வரை குறுகிய நேரத்தில் 20 முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து உணரப்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் சாலையிலேயே தஞ்சமடைந்தனர். 

இதையும் படிங்க;- பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து.. பள்ளி மாணவர்கள் உட்பட 16 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு..!

20 consecutive earthquakes in Andaman Island.. Tsunami warning

இந்த நிலநடுக்கம் அதிகாலை 5.57 மணியளவில் போர்ட் பிளேர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இருந்து 215 கிமீ ESE தொலைவில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மாநிலம் முழுவதும் பேரிடர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி ஏற்படும் அபாயமும் இருப்பதாக கூறப்பட்டுள்ளதால் மீனவர்களுக்கும், கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கும் பாதுப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்ததப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;-  சுதந்திரப் போராட்ட வீரரின் மகளில் காலில் விழுந்து வணங்கிய பிரதமர் மோடி.. யார் அந்த சுதந்திர போராட்ட வீரர் ?

20 consecutive earthquakes in Andaman Island.. Tsunami warning

ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 20 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. எனினும், நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. அதேபோல், ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் குறித்த விவரம் எதுவும் வெளியாகவில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios