Asianet News TamilAsianet News Tamil

அதிசய இளைஞர்கள்..! கருநாகப்பாம்பை கடிக்க வைத்து போதை..! அதிர்ந்து போன மருத்துவர்கள்..!

மது போதை, கஞ்சா, அபின், ஹெராயின், ஓப்பியம் உள்ளிட்ட போதை மருந்துகளுக்கு இளைஞர்கள் அடிமையாகுவதை பார்த்திருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், கருநாகப்பாம்புக் கடிவிஷத்துக்கு அடிமையாக பார்த்திருக்கிறோமா.
 

2 younsters loved to get snake bite for their personal enjoyment
Author
Rajasthan, First Published Sep 14, 2018, 5:20 PM IST

மது போதை, கஞ்சா, அபின், ஹெராயின், ஓப்பியம் உள்ளிட்ட போதை மருந்துகளுக்கு இளைஞர்கள் அடிமையாகுவதை பார்த்திருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், கருநாகப்பாம்புக் கடிவிஷத்துக்கு அடிமையாக பார்த்திருக்கிறோமா.

ராஜிஸ்தானில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் தங்கள் நாக்கில் கொடிய விஷம் கொண்ட கருநாகப்பாம்பை கடிக்கவைத்து அந்த விஷத்தின் மூலம் போதை ஏற்றுக்கொள்கிறார்கள். இதைப் பார்த்த மருத்துவர்கள் இதுஒரு மருத்துவ அதிசயம் என்று வியக்கிறார்கள்.

2 younsters loved to get snake bite for their personal enjoyment

கருநாகப்பாம்பு ஒருமுறை தீண்டும் விஷத்தின் மூலம் 20 மனிதர்களைக் கொல்ல முடியும் அல்லது யானை ஒன்றைக் கொல்ல முடியும். ஆனால், இரு இளைஞர்களும் பாம்பை நாக்கில் கொத்தவைத்து விஷத்தை போதையாக்கி வருகிறார்கள்.

இவர்கள் இருவரையும் சண்டிகாரில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆய்வு மையும் ஆய்வு செய்ய அழைத்துள்ளது. இருஇளைஞர்கள் குறித்து முதல் கட்டமாக நடத்தப்பட்ட ஆய்வு குறித்து இந்தியன் ஜர்னல் ஆப் சைக்காலிஜக்கல் மெடிசன் என்ற மருத்துவ இதழில் கட்டுரையும் வெளியாகியுள்ளது.

ஓப்பியம் மூலம் ஏற்படும் பாதிப்புகளுக்கு தீர்வாக பாம்பு விஷம் என்ற தலைப்பில் இந்த கட்டுரை வெளியாகியுள்ளது. இந்த கட்டுரையை டாக்டர்கள் அசீம் மேரா, டேபாஷிஸ் பாசு, சந்தீப் குரோவர் ஆகியோர் எழுதியுள்ளனர்.

2 younsters loved to get snake bite for their personal enjoyment

பாம்பு தீண்டினால் மனிதர்கள் உயிரிழந்துவிடும் சூழலில் இவர்கள் இருவரும் தொடர்ந்து பாம்பை தங்கள் நாக்கில் கொத்தவைத்து விஷத்தை உடலில் ஏற்றி உயிர்வாழ்கிறார்கள் என்பதை மருத்துவர்கள் ஆய்வு செய்கிறார்கள்.

இது குறித்து டாக்டர் சந்தீப் குரோவர் கூறுகையில், மனிதர்களின் உயிரைக் கொல்லும் பாம்புவிஷம் இவர்களுக்கு எப்படி போதை மருந்தாகிறது என்பதை ஆய்வு செய்கிறோம். ராஜஸ்தானில் வடமேற்குப் பகுதியில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் பாம்புக் கடியை போதையாக பயன்படுத்துகிறார்கள். இவர்களுக்கு பாம்பு கடி ஒன்றும் செய்வதில்லை. இதற்கு முன் மும்பை, ராஞ்சியில் சில குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பாம்பை தங்கள் கால், கைகளில் கடிக்க வைத்து அந்த விஷத்தை போதையா பயன்படுத்தினார்கள். ஆனால், விஷம் போதை மருந்தாக மாறுவது குறித்து தெளிவான ஆதாரங்கள் இல்லை. அதைநோக்கித்தான் ஆய்வு நகர்கிறது எனத் தெரிவித்தார்.

 

Follow Us:
Download App:
  • android
  • ios