2 terrorists killed in kashmir
இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம், அத்துமீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் பாகிஸ்தான் ராணுவம் 239 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த காலங்களைவிட அதிகமாகும் என்று ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார்.
காஷ்மீர் எல்லையில், பயங்கரவாதிகள் ஊடுவல் இருக்கலாம் என்பதால், பாதுகாப்பு படை தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பந்திப்போரா பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு வழியாக பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைய முயன்றனர்.
இதனை பார்த்த இந்திய ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பந்திப்போரா பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களைத் தேடும் பணியில் ராணுவத்தினர் தேடுதலில் ஈடுபட்டு வருகிட்னறனர்.
