Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவுக்கு அதிர்ச்சி.... தாக்குதலுக்கு மறுநாளே போர் விமானம் விழுந்து நொறுங்கியது... 2 பேர் உயிரிழப்பு..!

ஜம்மு-காஷ்மீரின் பட்காமில் இந்திய விமானப் படை போர் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 2 விமானிகள் உயிரிழந்தனர். 

2 Pilots Dead as Military Aircraft Crashes
Author
Jammu and Kashmir, First Published Feb 27, 2019, 12:00 PM IST

ஜம்மு-காஷ்மீரின் பட்காமில் இந்திய விமானப் படை போர் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 2 விமானிகள் உயிரிழந்தனர். 

காஷ்மீரில் ஊடுருவியுள்ள தீவிரவாதிகள் மற்றும் எல்லையில் தாக்குதல் நடத்திவரும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். நேற்று அதிகாலை பாகிஸ்தான் கோட்டைக்குள் சென்று இந்திய விமானப்படை வீரர்கள் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்களில் வேட்டையாடினர். இதில் 350-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 2 Pilots Dead as Military Aircraft Crashes

இதனையடுத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைப்பகுதியில் தொடர்ந்து வாளாட்டி வருகின்றனர். இதனால் பாகிஸ்தான் தரப்பில் இருந்து எந்நேரமும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் ராணுவத்தினர் மற்றும் விமானப்படை விமானங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. 2 Pilots Dead as Military Aircraft Crashes

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போர் விமானம் விபத்துக்குள்ளானது. பட்காம் விமான நிலையத்தில் இருந்து 7 கிமீ தொலைவில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் பயணம் செய்த 2 விமானிகள் உயிரிழந்தனர். தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானம் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios