Asianet News TamilAsianet News Tamil

2.77 ஏக்கர் ராம ஜென்ம பூமி இந்துக்களுக்கே... உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராம ஜென்ம பூமி  இந்துக்களுக்கே. இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார்.  
 

2.77 acres of Rama Genma land for Hindus ... Supreme Court of India
Author
Uttar Pradesh West, First Published Nov 9, 2019, 11:40 AM IST

நீண்ட நாட்கள் எதிர்பார்க்கப்பட்ட பாபர் மசூதி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. உத்தபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்கிற வழக்கில் கடந்த 2010ம் ஆண்டு  தீர்ப்பு வழங்கிய அலகாபாத் உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று சமமான பிரிவாக பிரித்து சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று அமைப்புகளுக்கு வழங்க உத்தரவிட்டிருந்தது.  இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடுகள் செய்யப்பட்டன.

2.77 acres of Rama Genma land for Hindus ... Supreme Court of India

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கியது. அப்போது 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்குவதாக தெரிவித்தனர். ‘’நிலத்தின் உரிமையை நம்பிக்கையின் அடிப்படையில் முடிவு செய்ய முடியாது. அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டம் நிலை நாட்டப்பட வேண்டும்.  நிர்மோகி அகார வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல.

 2.77 acres of Rama Genma land for Hindus ... Supreme Court of India

மசூதி அடித்தளத்தில் இருக்கும் அமைப்பு இஸ்லாமிய கட்டடக்கலையை சேர்ந்ததல்ல. மதங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை உச்சநீதிமன்றம் மதிக்கிறது. ஒரு மதத்தின் நம்பிக்கை மற்ற மதத்தினரின் நம்பிக்கையை தடுப்பதாக இருக்கக் கூடாது. அமைதியை காக்கவும், பாதுகாப்பை நிலைநாட்டுவதும் முக்கியம்  மத நம்பிக்கை என்பது ஓவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. 

நிலம் தொடர்பான மத்திய தொல்லியல் துறையின் கருத்தைநிராகரிக்க முடியாது. பாபர் மசூதி கட்டப்பட்ட இடம் இஸ்லாமிய கட்டடக் கலையை போன்றது அல்ல.  பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் ஏற்கெனவே இருந்த கட்டடம் இருந்துள்ளது. அயோத்தி ராமர் பிறந்த பூமியாக இந்துக்கள் நம்புகிறார்கள். அதே இடத்தை பாபர் மசூதி என இஸ்லாமியர்கள் அழைக்கிறார்கள்.  ஷன்னி பிரிவுக்கு  எதிராக ஷியா வாரியம் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்கிறோம். 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயல். 1856- க்கு பின்பே மட்டுமே இஸ்லாமியர்கள் நமாஸ் செய்யும் முறையை பின் பற்றி இருக்கிறார்கள். 2.77 acres of Rama Genma land for Hindus ... Supreme Court of India

1857ம் ஆண்டுக்கு முன்புவரை  இந்துக்கள் ஒரு பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 1857ம் ல் கட்டடத்தின் உள்பகுதிக்கும் வெளிப்பகுதிக்கும் இடையே தடுப்புகள் உருவாக்கப்பட்டன. பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களுடைய இடம் என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை.

ஆவணங்களின் படி இந்த சர்ச்சைக்குரிய நிலம் அரசுக்கு சொந்தமானது. இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க உச்சநீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. வக்பு போர்டு ஏற்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர மத்திய அரசும், உத்தரபிரதேச அரசும் வழங்க வேண்டும். அந்த இடத்தை மூன்று மாத காலத்திற்குள் வழங்க வேண்டும். அலகாபாத் உயர்நீதிமன்றம் சர்ச்சைக்குரிய இடத்தை 3 ஆக பிரித்துக் கொடுத்தது தவறு. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம். அதற்கான அமைப்பை 3 மாதங்களுக்கு உருவாக்க வேண்டும்’’ என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios