நாடாளுமன்றத்தில் 2017ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதையொட்டி நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, அறிக்கைகளை வாசித்து, 2017 – 18ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து பேசினார்.
அதில் விவசாயம், வீடு இல்லாதோருக்கு வீடு, சாலை, ஊரக வேலை வாய்ப்பு, மின்சாரம், ரயில்வே என பல்வேறு துறைகளுக்கான நிதிகள் ஒதுக்கீடு குறித்து பேசினார். அதில், இந்த ஆண்டுக்கான மொத்த பட்ஜெட் செலவு ரூ.21.47 லட்சம் கோடியாக உள்ளது என்றார்.
மேலும், 2016 – 17ம் நிதியாண்டில், இந்தியா முழுவதும் 1.75 கோடி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என அருண் ஜேட்லி தெரிவித்தார்.
