Maharashtra ministers மகாராஷ்டிராவி்ல் ஆளும் பாஜக அரசில் 75% அமைச்சர்கள் மீது கிரிமினல் வழக்கு:ஏடிஆர் அம்பலம்
மகாராஷ்டிராவில் புதிதாக அமைந்துள்ள பாஜக தலைமையிலான அரசில் உள்ள அமைச்சர்களில் 75% பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு(ஏடிஆர்) தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் புதிதாக அமைந்துள்ள பாஜக தலைமையிலான அரசில் உள்ள அமைச்சர்களில் 75% பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று ஜனநாயகத்துக்கான சீர்திருத்த அமைப்பு(ஏடிஆர்) தெரிவித்துள்ளது.
மகாரஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி அகன்றபின், தற்போது பாஜக தலைமையிலான அரசுஆட்சியில் உள்ளது. கடந்த 9ம் தேதி மகாராஷ்டிராவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு 20 பேர் கொண்ட அமைச்சரவை உருவாக்கப்பட்டது. இதில் 75 சதவீதம்பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன என்று ஏடிஆர் தெரிவித்துள்ளது.
நெருங்கும் சுதந்திரதினம்: டெல்லியில் 2 ஆயிரம் தோட்டாக்கள் கண்டுபிடிப்பு: பாதுகாப்பு தீவிரம்
கடந்த 2019ம் ஆண்டு தேர்தலின்போது, தற்போது பதவி ஏற்ற அமைச்சர்கள் அளித்த பிரமாணப்பத்திரத்தின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்களை ஏடிஆர்அமைப்பு எடுத்துள்ளது.
இதன்படி, 20 அமைச்சர்களில் 75 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்கு நிலுவையில் உள்ளன, 65சதவீதம் பேர் மீது அதாவது 13பேர் மீது தீவிரமான கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளன.
அனைத்து அமைச்சர்களும் கோடீஸ்வரர்கள். அமைச்சர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.47.45 கோடியாகும். அமைச்சர்களில் மலபார் ஹில் தொகுதி எம்எல்ஏ மங்கல் பிரஹாத்தின் சொத்து மதிப்பு ரூ.44.65 கோடியாகும். குறைந்தபட்சமாக பைதான் தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ புமாரே சந்திப்பன்ராவ் ஆசரமுக்கு ரூ.2.92 கோடி சொத்துக்கள் உள்ளன. 20பேர் கொண்ட அமைச்சர்களில் ஒருவர் கூட பெண் இல்லை.
10 நாட்களில் ஒரு கோடி தேசியக் கொடி விற்று இந்தியா போஸ்ட் சாதனை
அமைச்சர்களில் 8 பேர் 10 முதல் 12ம்வகுப்பு வரைதான் படித்துள்ளனர். 11 பேர் பட்டப்படிப்பையும், ஒருவர் டிப்ளமோவும் முடித்துள்ளார். 4 அமைச்சர்களின் சராசரி வயது 41 முதல் 50 ஆகவும், மற்றவர்களின் சராசரி வயது 51 முதல் 70 வயதுவரை உள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 41 நாட்களாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மட்டும் இருந்தனர். கடந்த 9ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டதில் 18 பேர் சேர்க்கப்பட்டனர்.
மகாராஷ்டிரா அமைச்சரவை 40 நாட்களுக்குப் பின்னர் இன்று விரிவாக்கம்; 18 அமைச்சர்கள் பதவியேற்பு!!