Har Ghar Tiranga: tiranga flag: 10 நாட்களில் ஒரு கோடி தேசியக் கொடி விற்று இந்தியா போஸ்ட் சாதனை

கடந்த 10 நாட்களில் இந்திய அஞ்சல்துறை தனது 1.50 லட்சத்துக்கு மேலான கிளைகள் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான தேசியக் கொடியை விற்பனை செய்து சாததித்துள்ளது என மத்திய தகவல்தொடர்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

The Department of Posts sells over a million national flags in ten days.

கடந்த 10 நாட்களில் இந்திய அஞ்சல்துறை தனது 1.50 லட்சத்துக்கு மேலான கிளைகள் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான தேசியக் கொடியை விற்பனை செய்து சாததித்துள்ளது என மத்திய தகவல்தொடர்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வரும் 15ம் தேதி இந்த தேசம் 75-வது சுதந்திரத்தினத்தைக் கொண்டாட இருக்கிறது. இந்த சுதந்திரதினத்தை சிறப்பாகக் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்து ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இதற்காக வீடுகள் தோறும் நாளை முதல் 15ம் தேதிவரை தேசியக் கொடிகளை ஏற்றலாம் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

The Department of Posts sells over a million national flags in ten days.

2022ம் ஆண்டின் கடைசி ‘சூப்பர் மூன்’ இன்று வானில் தெரியும்: பெயர் என்ன? தமிழகத்தில் பார்க்க முடியுமா?

 மாநிலங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், அரசு அமைப்புகள், மத்தியஅரசு நிறுவனங்கள், அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்களுக்கு போதுமான அளவில் தேசியக் கொடி கிடைக்க மாநில அரசுகள் தேவையான ஏற்பாடுகளைச் செய்யவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டது. மேலும், அஞ்சல் நிலையங்களிலும் தேசியக் கொடி விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

அந்த வகையில் கடந்த 10 நாட்களில் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்டஅஞ்சலகங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான தேசியக் கொடிகள் விற்பனையாகியுள்ளன.

The Department of Posts sells over a million national flags in ten days.

நிதிக்கட்டுப்பாடு அவசியம்; இந்தியா போன்ற வறுமை நாட்டில் இலவசங்களை நிராகரிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

இதுகுறித்து மத்தியதகவல் தொடர்புத்துறை அமைச்சகம் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ இந்திய அஞ்சல் துறை தனது 1.50 லட்சம் கிளைகள்மூலம், ஹர் கார் திரங்கா பிரச்சாரத்தை எடுத்துச் சென்றது. கடந்த 10 நாட்களில் அஞ்சல் துறை ஒரு கோடிக்கும் அதிகமான தேசியக் கொடியை நேரடியாகவும், ஆன் லைன் மூலமும்  விற்பனை செய்துள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

அஞ்சல் நிலையங்களில் ஒரு தேசியக்கொடி ரூ.25-க்கு விற்கப்படுகிறது. ஆன்லைன் விற்பனையில் அஞ்சலகம் இலவசமாக வீட்டுக்கே டெலிவரி செய்கிறது. இதுவரை 1.75 லட்சம் தேசியக் கொடிகள் ஆன்லைனில் வாங்கப்பட்டுள்ள. அஞ்சல்துறையில் பணியாற்றும் 4.20 லட்சம் ஊழியர்களும் ஹர் கர் திரங்கா பிரச்சாரத்தை உற்சாகமாகக் கொண்டு செல்கிறார்கள். அஞ்சல் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனை வரும் 15ம் தேதிவரை நடக்கும். 

The Department of Posts sells over a million national flags in ten days.

rahul: modi: பிரதமர் பதவிக்கான தரத்தைக் குறைக்காதீர்கள்: பிரதமர் மோடியை விளாசிய ராகுல் காந்தி

மக்கள் அஞ்சலகங்களுக்கு நேரடியாகச் சென்றும் தேசியக் கொடியை வாங்கலாம் அல்லது, epostoffice.gov.in என்ற இணையதள முகவரியிலும் ஆன் லைனில் ஆர்டர் செய்யலாம். 

இது மட்டுமல்லாமல் தேசியக் கொடியுடன் செல்பி எடுத்து www.harghartiranga.com என்ற தளத்தில் பதிவேற்றம் செய்யலாம். புதிய இந்தியா கொண்டாடத்திலும் பங்கேற்று பதிவுசெய்யலாம். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios