Independence day: நெருங்கும் சுதந்திரதினம்: டெல்லியில் 2 ஆயிரம் தோட்டாக்கள் கண்டுபிடிப்பு: பாதுகாப்பு தீவிரம்

நாட்டின் 75-வது சுதந்திரதினம் வரும் 15ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், இன்று 2 ஆயிரம் பயன்படுத்தப்படாத தோட்டாக்களை டெல்லி போலீஸார் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர் என்று பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன

6 people have been arrested after 2,000 cartridges were recovered in Delhi ahead of Independence Day.

நாட்டின் 75-வது சுதந்திரதினம் வரும் 15ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், இன்று 2 ஆயிரம் பயன்படுத்தப்படாத தோட்டாக்களை டெல்லி போலீஸார் கண்டுபிடித்து பறிமுதல் செய்துள்ளனர் என்று பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன

டெல்லியின் கிழக்குப்பகுதியில் ஆனந்த்விஹார் பகுதியில் இந்த துப்பாக்கித் தோட்டாக்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். 

ஆனந்த் விஹார் பகுதியில் பயங்கர ஆயுதங்கள் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் வந்தது. இதையடுத்து, போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் சட்டவிரோதமாக ஆயுதங்களையும், தோட்டாக்களையும் கடத்த முயன்றதாக 6 பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

இந்த சம்பவத்தையடுத்து, மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ரயில்வே நிலையம், மெட்ரோ ரயில் நிலையம், விமானநிலையம், பேருந்து நிலையங்கள், சந்தைகளில் போலீஸார் கூடுதலாக நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ரோந்துப்பணியையும் போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்கள், டார்மெட்டரிகள் போன்றவற்றையும் போலீஸார் சோதனையிட்டு வருகிறார்கள். சுதந்திரதினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 10ஆயிரம்  போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios