டெல்லியில் இருந்து நேற்று இரவு தனியார் சொகுசு பேருந்து ஒன்று பிகார் மாநிலம் மோதிஹரி நகரம் நோக்கி கிளம்பியது. பேருந்தில் 45 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். நள்ளிரவில் உத்தரப் பிரதேச மாநிலம், பெரோசாபாத் மாவட்டம் ஆக்ரா-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் பேருந்தின் முன்னே கண்டெய்னர் லாரி ஒன்று சென்றுள்ளது.

அந்த நேரத்தில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக சென்றது. பதான் என்கிற இடத்தின் அருகே வந்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பேருந்து பயங்கரமாக மோதியது. இதில் பேருந்தின் ஒரு பகுதி அப்பளம் போல நொறுங்கி உள்ளே இருந்த 14 பயணிகள் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். மற்றவர்கள் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

விபத்து கண்டு அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பலரின் நிலைமை கவலை கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என தெரிகிறது.

கோர தாண்டவமாடும் கொடூர கொரோனா..! ஒரே நாளில் 242 உயிர்களை பறித்தது..!