புல்வாமா தாக்குதல் தொடர்பாக விதிகளை மீறி சர்ச்சையான செய்தியை ஒளிப்பரப்பியதாக 13 டிவி சேனல்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

கடந்த 14ம் தேதி ஒளிபரப்பான அந்த சர்ச்சையான செய்திகளுக்கு பொறுபேற்று அடுத்த 7 நாட்களுக்குள் விளக்கமளிக்கவில்லை எனின் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சரவை கடுமையாக எச்சரித்துள்ளது. 

கட்ந்த 14ம் தேதி புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த கொடூரமான தாக்குல் பின்னணியில் பாகிஸ்தானின் பங்கும் இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. காஷ்மீரில் இதுவரை இல்லாத அளவிற்கு பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட இந்த கொடூரத் தாக்குதலில் பாகிஸ்தான் பின்னணியில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அதில், இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு சம்பந்தமில்லை. இந்தியா இரட்டை வேடம் போடுவதாக விமர்சித்து இருந்தார். இந்தச் செய்தியை ஒளிபரப்பியல் 13 டி.வி.சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

அந்த டிவி சேனல்களின் பட்டியல் இதோ..

1.ஏபிபி செய்தி
2.சூர்யா சமாச்சார்
3.டிரங்கா டிவி
4.நியூஸ் நேசன்
5.ஜீ ஹிந்துஸ்தான்
6.டோட்டல் டிவி
7.ஏபிபி மஜ்ஹா
8.நியூஸ்18 லோக்மத்
9.ஜெய் மஹாராஷ்ட்ரா
10. நியூஸ்18 குஜராத்
11. நியூஸ்24
12. சண்டேஷ் நியூஸ்
13.நியூஸ்18 இந்தியா


ஆகிய தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிய செய்தியில் பாகிஸ்தான் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் ஹாஃபூர் பேசிய காட்சிகளையும் இணைத்து அந்த நோட்டிஸுடன் அனுப்பி உள்ளது. அந்தச் செய்திகள், வன்முறையையை தூண்டும் விதமாகவும், உள்ளடக்கத்தில் சட்டம் ஒழுங்கு விதிகளுக்கு எதிராக உள்ளதாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாகவும், நாட்டின் ஒற்றுமையை சீர்குழைப்பதாக உள்ளதகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.