பிளஸ் 2 பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாது என்பதால், மாணவன் ஒருவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலம் மொகாலியைச் சேர்ந்தவர் கரண்வீர் சிங். இவர் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். ப்ளஸ் 2 பொது தேர்வு எழுதியிருக்கிறார்.

இயற்பியல் பாட தேர்வு சரியாக எழுதவில்லை என்ற விரக்தியுடன் இருந்து வந்துள்ளார். சரியாக தேர்வெழுதவில்லை என்ற மன உளைச்சலில் இருந்த கரண்வீர் சிங், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக அவர் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில், என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் எதிர்பார்ப்புக்கேற்ப என்னால் வாழ முடியவில்லை. 

உங்களின் கனவை என்னால் பூர்த்தி செய்ய முடியவில்லை. நான் தாத்தா பாட்டியை மிக அதகமாக நேசிக்கிறேன். அவர்கள் நல்லபடியாக பார்ததுக் கொள்ளுங்கள் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

பிளஸ் 2 பொது தேர்வுக்கு முந்தைய தேர்வுகளில் 90 சதவிகித மதிப்பெண்கள் பெற்ற கரண்வீர் சிங், பொது தேர்வில் இன்னும் அதிக மார்க் எடுப்பேன் என்று பெற்றோரிடம் கூறியிருந்தாராம்.

இந்த நிலையில்தான், இயற்பியல் தேர்வில் 3 மதிப்பெண் கொண்ட 3 கேள்விகளுக்கு  சரியாக விடையளிக்க முடியவில்லை. இந்த விரக்தியில் கரண்வீர் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.