Deported Indians Back to India : சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்த 119 இந்தியர்கள் 2 விமானங்கள் மூலமாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸிற்கு வர இருக்கின்றனர்.
Deported Indians Back to India : அமெரிக்காவிற்குள் அனுமதியின்றி நுழைந்த 119 இந்தியர்கள் இந்த வார இறுதியில் நாடு திரும்புவார்கள் என்று தகவல் வெளியாகிருக்கிறது. இரண்டு விமானங்களில் அமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு அவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் போது இந்த தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 15 சனிக்கிழமை ஒரு விமானமும், 16 ஞாயிற்றுக்கிழமை மற்றொரு விமானமும் அமிர்தசரஸில் உள்ள குரு ராம் தாஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடையும்.
நாடு கடத்தப்பட்டவர்களில் 67 பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள், 33 பேர் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள், எட்டு பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள், மூன்று பேர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், இரண்டு பேர் ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள். ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த தலா ஒருவரும் இதில் அடங்குவர்.
மெக்சிகோ எல்லையிலும் பிற வழிகளிலும் அமெரிக்காவிற்குள் அனுமதியின்றி நுழைந்த இவர்கள், பின்னர் தங்கள் கடவுச்சீட்டுகளை அழித்ததாக அறிக்கை தெரிவிக்கிறது. டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு, அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் இரண்டாவது இந்தியக் குழு இது. பிப்ரவரி 5 அன்று அமிர்தசரஸில் வந்த முதல் குழுவில் 104 இந்தியர்கள் இருந்தனர். கைகள் கட்டப்பட்டு, கால்களில் சங்கிலி போடப்பட்ட நிலையில் தங்களை அழைத்து வந்ததாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.
மகாகும்பமேளா 2025ல் புனித நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 50 கோடியாக அதிகரிப்பு!
அமெரிக்கப் பயணத்தின் போது, மனிதக் கடத்தலை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார். சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசிக்கும் அனைத்து இந்தியர்களையும் திருப்பி அழைத்துச் செல்ல இந்தியா தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார். அமெரிக்க சுங்க மற்றும் எல்லைக் காவல் (USCBP) தரவுகளின்படி, 2022 மற்றும் 2024 நவம்பர் மாதங்களுக்கு இடையில் சுமார் 1,700 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கங்கை, யமுனையை சுத்தம் செய்யும் இயந்திரம்; நாள்தோறும் 15 டன் வரையிலான கழிவுகள் அகற்றம்!
