Asianet News TamilAsianet News Tamil

10-ம் மற்றும் 12-ம் பொதுத்தேர்வுகள் ரத்து... பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு..!

சத்தீஸ்கர் மாநிலத்தில் 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பள்ளி அளவில் நடத்தப்பட்ட தேர்வுகளை அடிப்படையாக வைத்தே மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளனர்.

10th and 12th class exams cancels...Chhattisgarh board
Author
Chhattisgarh, First Published May 15, 2020, 4:37 PM IST

சத்தீஸ்கர் மாநிலத்தில் 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பள்ளி அளவில் நடத்தப்பட்ட தேர்வுகளை அடிப்படையாக வைத்தே மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளனர். 

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் 3வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால், செமஸ்டர் தேர்வுகள், 10ம் வகுப்பு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.

10th and 12th class exams cancels...Chhattisgarh board

இந்த நேரத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு, தேர்வு நடத்தப்படாத பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் சில பாடங்களுக்கான பொதுத் தேர்வை வரும் ஜூன் 1-ம் தேதி முதல் நடத்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு ஆசிரியர்கள் சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தேர்வை நடத்தாமல் மாற்று வழிகளில் மாணவர்களுக்கு முடிவு வழங்கலாம் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் மேல்நிலைக் கல்வி வாரியம் தங்களுடைய மாநிலத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வை முற்றிலுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே பள்ளி அளவில் நடத்தப்பட்ட தேர்வுகளை அடிப்படையாக வைத்தே மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முடிவுகளை அறிவிக்க இருப்பதாக முடிவெடுத்துள்ளது.

10th and 12th class exams cancels...Chhattisgarh board

மார்ச் மாதத்தில் நாடு முழுவதும் ஊடரங்கு அமல்படுத்தப்பட்டதால் சத்தீஸ்கர் மாநில பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு புவியியல் மற்றும் சில பாடங்களுக்கான தேர்வு நடைபெறவில்லை. அதேபோன்று பிளஸ் 2 மாணவர்களுக்கான சில பாடங்களிலும் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஒருவேளை இடைநிலைத் தேர்வுகளையும் எழுதத் தவறிய மாணவர்கள் இருந்தால் அவர்களுக்கும் குறைந்தபட்ச மதிப்பெண் அளிக்கப்பட்டு அவர்கள் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios