தெலுங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில் உள்ள ஐஐஐடி-பாசார் என்றழைக்கப்படும் ராஜீவ் காந்தி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மதிய உணவு சாப்பிட்ட 100 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில் உள்ள ஐஐஐடி-பாசார் என்று அழைக்கப்படும் ராஜீவ் காந்தி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மதிய உணவு சாப்பிட்ட 100 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்து நிர்மல் ஆட்சியர் முஷாரப் அலி ஃபரூக்கி கூறுகையில், ஐஐஐடி பாசராவில் உள்ள விடுதியில், மூன்று மெஸ்களில் இரண்டில் மதிய உணவை சாப்பிட்ட 100 மாணவர்கள் நோய்வாய்ப்பட்டனர். 

இதையும் படிங்க: உ.பி., யில் ஒரு பகவான் ஆசிரியர் : இடமாறுதல் பெற்ற ஆசிரியருக்கு பிரியாவிடை அளிக்க மறுக்கும் மாணவர்கள்!

அவர்களில் 50 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற மாணவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். உணவு விஷமானதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மெஸ் ஊழியர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார். முன்னதாக மாணவர்களுக்கு மதிய உணவாக முட்டை கறி மற்றும் சாதம் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: போலி சாமியார் பேச்சைக் கேட்டு ஆடு மேய்க்கும் சிறுவனை பலி கொடுத்த தம்பதி. ஆண் குழந்தைக்காக நேர்த்திக் கடன்.

அதனை சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்கொண்டனர். இந்த நிலையில் உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். சுகாதார அமைச்சர் டி ஹரிஷ் ராவ், நோய்வாய்ப்பட்ட மாணவர்களுக்கு சிறந்த சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவக் குழுக்களை பாசருக்கு அனுப்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.