Asianet News TamilAsianet News Tamil

காங்கிரஸ் நிர்வாகியின் சகோதரர் வீட்டில் ஒரு கோடி பறிமுதல்... எங்க வச்சுருந்தாங்கனு தெரியுமா?

கர்நாடக தேர்தலில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஒருவரின் சகோதரர் வீட்டில் இருந்து 1 கோடி ரூபாய் ரொக்கத்தை வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

1 crore which hiden on tree seized in raid counducted in congress candidates brothers home
Author
First Published May 4, 2023, 5:22 PM IST

கர்நாடக தேர்தலில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஒருவரின் சகோதரர் வீட்டில் இருந்து 1 கோடி ரூபாய் ரொக்கத்தை வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுப்பிடித்துள்ளது. இதனிடையே தட்சிண கன்னடா மாவட்டம், புத்துார் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ராய், வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய, பணத்தை அவரது சகோதரர் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக, வருமானவரித் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையும் படிங்க: ஒருமித்த உறவில் உள்ள சிறார்களை தண்டிக்க POCSO சட்டம் இயற்றப்படவில்லை.. உயர்நீதிமன்றம் கருத்து.

1 crore which hiden on tree seized in raid counducted in congress candidates brothers home

அதன்பேரில் மைசூரில் உள்ள அசோக் ராயின் சகோதரர் சுப்பிரமணிய ராய் வீட்டில், வருமானவரித் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். வீடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனை பணம் எதுவும் சிக்காததால் அங்கிருந்து புறப்பட முற்பட்ட போது சுப்பிரமணிய ராய் குடும்பத்தினர் அங்கிருந்த மரம் ஒன்றை பயம் மற்றும் பதற்றத்துடன் பார்த்தனர்.

இதையும் படிங்க: மணிப்பூரில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் வன்முறை: வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு

1 crore which hiden on tree seized in raid counducted in congress candidates brothers home

இதனை கவனித்த வருமானவரித் துறையினர், சந்தேகத்தின் பேரில் அந்த மரத்தினை சோதனை செய்தனர். அப்போது அதில் ஒரு அட்டை பெட்டி கட்டி தொங்க விடப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதை எடுத்து பார்க்கையில் அதில் கட்டு கட்டாக 1 கோடி ரூபாய் ரொக்கம் இருந்துள்ளது. இதை அடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, இதுக்குறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios