betting sites :சூதாட்ட இணையதள விளம்பரங்களைத் தவிருங்கள்: செய்தி இணையதளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
ஆன்-லைன் சூதாட்ட இணையதள விளம்பரங்களைத் தவிர்க்கு மாறு ஓடிடி தளங்கள், தனியார் சேனல்கள், செய்தி இணையதளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆன்-லைன் சூதாட்ட இணையதள விளம்பரங்களைத் தவிர்க்கு மாறு ஓடிடி தளங்கள், தனியார் சேனல்கள், செய்தி இணையதளங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
தனியார் செயற்கைக்கோள் சேனல்கள், ஆன்-லைன் சூதாட்ட இணையதள விளம்பரங்களை வெளியிடுவதை, ஊக்குவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கண்டிப்பாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ லேப்டாப் வருது! இவ்வளவுதான விலை?
அதுமட்டுமல்லாமல் செய்தி சேனல்களின் இணையதங்கள், செய்தி இணையதளங்கள், ஓடிடி தளங்களும் இதுபோன்ற ஆன்-லைன் சூதாட்ட இணையதள விளம்பரங்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்.
மத்திய அரசு கேட்டுக்கொண்டபின்பும், தனியார் சேனல்கள், ஆன்-லைன் சூதாட்ட விளம்பரங்களை தொடர்ந்து ஒளிபரப்பி, ஊக்குவித்து வந்தால், அந்த சேனல்கள் மீது சட்டப்படி விதிமுறை மீறலின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
செய்தி மற்றும் நடப்புச் செய்திகளை வெளியிடும் செய்தி இணையதளங்கள், ஓடிடி தளங்களும், மத்திய அரசின் இதே விதிமுறையைப் பின்பற்றி, ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுவதைத் தவிர்க்கவேண்டும். இந்திய வாடிக்கையாளர்களைக் குறிவைத்து வெளியிடப்படும் இதுபோன்ற விளம்பரங்களை வெளியிடுவதைத் தவிர்க்கவேண்டும்.
குஜராத்தில் ஆட்சியை தக்கவைக்கும் பாஜக: ஆம்ஆத்மிக்கு 2 இடங்கள்: கருத்துக்கணிப்பில் தகவல்
சமீப காலமாக ஆன்-லைன் சூதாட்ட இணையதளங்கள், செய்தித் தளங்களைக் குறிவைத்து அதில் தங்கள் பொருட்கள் குறித்து விளம்பரம் செய்து மக்களை ஈர்க்கிறார்கள். ஆன்-லைன் சூதாட்ட இணையதளங்கள் சார்பில் நடத்தப்படும் செய்தித் தளங்களில் வெளியிடப்படும் விளம்பரங்கள், செய்தி இணையதளங்களின் லோகோக்கள் சூதாட்ட தளங்கள் லோகோபோல் உள்ளன.
சூதாட்டத் இணையதளங்களும், அவற்றால் நடத்தப்படும் இணையதளங்களும் அரசிடம் முறையாக அனுமதி பெறாதவை, இந்திய சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாதவை. ஆன்-லைன் சூதாட்டத் தளங்களால் நடத்தப்படும் செய்திகளின் கீழ் சூதாட்ட விளம்பரங்களை ஊக்குவிக்கின்றன.
ஆன்-லைன் சூதாட்ட இணையதளங்கள் தங்களை தொழில்முறை விளையாட்டுத் தளங்கள், விளையாட்டுச் செய்தி இணையதளங்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு சூதாட்ட விளம்பரங்களை வெளியிடுகின்றன என்று மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது
பிரதமர் கதி திட்டம்: சீனாவிலிருந்து தொழிற்சாலைகளை இந்தியாவுக்கு ஈர்க்கும் மோடியின் மெகா முயற்சி
ஆன்லைன் சூதாட்ட இணையதளங்கள், செய்திகளை வெளியிட்டு அதன் கீழ் சூதாட்ட விளம்பரத்தை வெளியிடுகின்றன. ஆன்-லைன் சூதாட்ட விளம்பரங்கள் சட்டவிரோதமானவை என அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விளம்பரங்களை சேனல்கள், டிஜிட்டல் மீடியாக்களில் வெளியிடக்கூடாது”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.