ஜம்மு காஷ்மீர் மாநிலம் அஹ்னூரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் 3 பேர் இறந்தனர்.

காஷ்மீரின் அஹ்னூர் பகுதியில் ஜிஆர்இஎப் (General Reserve Engineer Force) ராணுவ முகாம் உள்ளது. இன்று அதிகாலையில் இந்த முகாமுக்கும் நுழைந்த தீவிகரவாதிகள், ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் 3 பேர் பலியானார்கள்.

தீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, அப்பகுதி முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.