You will drink fruit juices for morning healthly

தினமும் காலையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறேன் என்று பழச்சாறுகளை குடிப்பீர்களா? பழச்சாறுகள் உடல் எடையை அதிகரிக்காது என்று நினைப்பவரா? காலையில் பழச்சாறுகளை பருகுபவர்கள் உடலில்தான் அதிகப்படியான கலோரிகள் சேர்க்கிறது என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

சிலர் காலையில் புரோபயோடிக் பானங்களைப் பருகுவார்கள். ஆனால் இந்த புரோபயோடிக் பானங்கள் குடல் ஆரோக்கியத்தை சீராக்குமே தவிரஉடல் எடையைக் குறைக்க உதவாது. மாறாக இதில் சேர்க்கப்பட்டிருக்கும் சர்க்கரைபவுடர் பால்செயற்கை இனிப்பூட்டிகள் போன்றவை உடலில் கலோரிகளின் அளவைத்தான் அதிகரிக்கும்.

நீங்கள் குண்டாகக் கூடாது என நினைத்தால் இந்த பானங்களை காலையில் பருகுவதைத் தவிர்த்திடுங்கள்.

*வடஇந்திய பகுதிகளில் லஸ்ஸி மிகவும் பிரபலமான ஓர் பானம். இந்த பானமானது தயிர்சர்க்கரைதண்ணீர் சேர்த்து செய்யப்படுகிறது. இதிலுள்ள கொழுப்புக்களும்சர்க்கரையும் உடல் எடையை மிகவும் வேகமாக அதிகரிக்கும். அதிலும் ஒரு டம்ளர் லஸ்ஸியில் 159 கலோரிகள் இருக்கிறதாம்.

பாதாம் பால் அல்லது சாக்லேட் பாலைப் பிடிக்காதவர்களே இல்லை. ஒரு டம்ளர் சாக்லேட் அல்லது பாதாம் பாலில் 158 கலோரிகள் இருக்கும். இருப்பினும் கடைகளில் விற்கப்படும் பாதாம் பவுடர் மற்றும் சாக்லேட் பவுடரை பாலில் சேர்த்து கலந்து பருகினால்அதில் சேர்க்கப்பட்டுள்ள செயற்கை சுவையூட்டிகளால் உடல் பருமன்தான் ஏற்படும். 


பழச்சாறாக குடிக்காமல் அவற்றை அப்படியே சாப்பிட்டால் தான் அதன் முழுமையான பலனைப் பெற முடியும். அதனை சாறு வடிவில் பருகும் போதுஅதில் சுவைக்காக சர்க்கரையை சேர்ப்போம். இதனால் அந்த பழச்சாறு உடலுக்கு நன்மையைக் கொடுப்பதற்கு பதிலாகதீமையைத் தான் விளைவிக்கும்.

ஒரு டம்ளர் எருமை பாலில் 280 கலோரிகளும், 15 கிராமிற்கும் மேலாக கொழுப்புக்களும் உள்ளது. 
வாழைப்பழத்தையும்பாலையும் ஒன்றாக சாப்பிடக்கூடாது. ஒரு வாழைப்பழத்தில் 108 கலோரிகள் உள்ளது. இதில் பாலும் சேர்ந்தால் அவ்ளோ தான்.
* ஆரோக்கியமான பானமாக கருதும் ஸ்மூத்தியில் கூட மித மிஞ்சிய கலோரிகளும்கொழுப்புக்களும் அதிகமான அளவில் இருக்கும். ஒரு டம்ளர் ஸ்மூத்தியில் 150 லோரிகள் இருக்கிறது.

இப்பானங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமனாகி மன அழுத்தத்துக்கு ஆளாவோம். எனவே மேற்சொன்ன பானங்களை தவிர்ப்பது நல்லது.