Asianet News TamilAsianet News Tamil

மருந்து அட்டைகளில் இருக்கும் வெற்றிடம் எதுக்கு தெரியுமா?

you know-what-cards-are-in-medicine-vacuum
Author
First Published Dec 6, 2016, 1:22 PM IST


பொதுவாக மருந்து வாங்கும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து ஸ்பேஸ் அல்லது ப்ளாக்கிலும் மருந்துகள் இடம் பெற்றிருக்கும்.

ஆனால், சில மருந்துகளில் ஐந்து அல்லது ஆறு ப்ளாக் இருப்பினும், நடுவில் இருக்கும் ஒரு ப்ளாக்கில் மட்டும் மருந்து இடம் பெற்றிருக்கும். ஏனைய ப்ளாக்குகள் எம்ப்டியாக இருக்கும்.

இது ஏன் இப்படி அமைந்திருக்கிறது? இதற்கான காரணம் என்ன? நாம் பெரிதாக யோசித்திருக்க வாய்ப்புகள் குறைவு. சில சமயங்களில் சிலர், கம்பெனி காரனுக்கு என்ன லூசா.. ஏன் இப்படி டிஸைன் பண்ணியிருக்கான் என கிண்டலாக கூட பேசியிருக்கலாம்.

ஆனால், இந்த அமைப்பிருக்கு சில காரணங்கள் இருக்கின்றன. அவற்றை பற்றி இனிக் காணலாம்….

குழப்பம்!

சிலர் மருந்து அட்டை வாங்கிக் கொடு வீட்டிற்கு வந்த பிறகு, ஐந்து மருந்துகள் இருக்க வேண்டிய இடத்தில் ஒன்று இருக்கிறது? நம்மை ஏமாற்றிவிட்டார்களா என குழப்பம் அல்லது கோபம் கூட அடைந்திருக்கலாம். ஆனால், இது ஏமாற்று வேலை இல்லை.

வேதியல் மாற்றம்!

சில மருந்துகள் என்னதான் மருந்து அட்டையில் ப்ளாக்குகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தாலும் கூட அதன் வேதியல் மாற்றங்கள் வெளிவர வாய்ப்புகள் இருக்கின்றன.

இரண்டும் ஒரே மருந்து தான் என்ற போதும், ஒன்றுடன் ஒன்று சேரும் போது வேதியல் மாற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும் கூட சில மருந்து அட்டைகளில் இடைவெளி விட்டு அடைக்கப்படுகின்றன.

பிரின்ட்டட் ஏரியா!

எல்லா மருந்து அட்டைகளின் பின்னும் அதில் இருக்கும் பயன்கள் மற்றும் மூலப்பொருட்கள், தயாரிக்கப்பட்ட இடம், உற்பத்தியாளர் விபரங்கள் கண்டிப்பாக அச்சடிக்க வேண்டும் என்பது நிபந்தனை.

அதற்கான இடம் பற்றாக்குறை ஏற்பட கூடாது என்பதற்காக கூட சில மருந்து அட்டைகளில் எம்ப்டி ப்ளாக்குகள் வைக்கப்படுகின்றன.

சேதம்!

பிரின்ட்ட ஏரியா பற்றாக்குறை ஏற்படக்கூடாது எனில், ஒரு ப்ளாக் மட்டும் வைத்து பேக்கிங் செய்யலாம். தான். ஆனால், அது எளிதாக அந்த ஒரு மருந்தை சேதமடைய வைத்துவிடலாம், உடைய காரணமாகிவிடலாம். இதை தடுப்பதற்காகவும் சிலர் எம்ப்டி ப்ளாக்குகள் வைக்கின்றனர்.

மாதிரி மருந்துகள்!

சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தாங்கள் புதியதாக தயாரித்த மருந்துகளை மருத்துவர்களிடம் கொடுத்து பயன்படுத்தி கூற சொல்வது இயல்பு. இப்படிப்பட்ட மாதிரி மருந்துகள் இலவசமாக தான் தரப்படும்.

இந்த மாதிரி மருந்து அட்டைகளில் எல்லா ப்ளாக்கிலும் மருந்துகள் இருக்காது. குறைவாக தான் இருக்கும்.

காரணங்கள்!

வேதியல் மாற்றங்கள், பேக்கிங் குறித்த சில காரணங்கள், இலவசமாக தரப்படும் சில மாதிரி மாத்திரை என பல காரணங்கள் கொண்டு தான் இதுபோன்ற மருந்து அட்டைகளில் எம்ப்டி ப்ளாக்குகள் தரப்படுகின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios