Workers in computer should practice 20-20-20 training. What is it 20-20-20?

1.. ஒரே இடத்தில் உட்கார்ந்திராமல் அவ்வப்போது எழுந்து நடக்கவேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக அமர வேண்டாம்.

2.. போரடிக்கிறது' என அடிக்கடி காபி, டீ குடிக்கக் கிளம்பாமல், தூய்மையான தண்ணீரைக் குடிப்பதே நல்லது.

3.. லிஃப்ட் பயன்படுத்துவதை கூடுமானவரை தவிர்க்கவும்.

4.. ஓடுவது நல்ல உடற்பயிற்சி. ஆனால், கறுப்பு நிற ஆடை அணிந்து கொண்டு ஓடக் கூடாது. உடலில் அதிக வெப்பம் ஈர்க்கப்பட்டு சிக்கல் உருவாகலாம்.

5.. சமைக்கும்போது ஜன்னல்களைத் திறந்து வைப்பது அல்லது எக்ஸாஸ்ட் ஃபேனை ஓடவிடுவது நல்லது. சமையல் எரிவாயுவிலிருந்து வெளிப்படும் நச்சுக்களைத் தொடர்ந்து சுவாசிப்பது நுரையீரலுக்கு ஆபத்தானது.

6. கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவர்கள் 20 – 20 - 20 பயிற்சியைப் பழக வேண்டும். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது அடி தொலைவிலுள்ள பொருளை, இருபது விநாடிகள் பார்த்து கண்ணை இலகுவாக்குவதுதான் இப்பயிற்சி. அவ்வப்போது கண்களைக் கழுவுவதும் அவற்றுக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.