Womens feet are medical anklets and watched

நகைகள் என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்கிறது.

நமக்கு நோய்கள் உருவாவதை தடுப்பதற்கு மருந்துகளை உபயோகிப்பதை விட நகைகளை நாம் அணிந்தால் அது நல்ல பயன் தரும்.

பெண்கள் காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். ஏன் தெரியுமா?

** வெள்ளி நகைகள் நம் ஆயுளை விருத்தி செய்யக் கூடியவை.

** நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி சருமத்தை ஆரோக்கியமாக்கும்.

** சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு கொலுசு அணிவித்து விடுகின்றோம். குழந்தைக்கு நடக்கும்போது எப்போதும் சங்கீதம் கேட்க வேண்டும் என்பதாலும் குடும்பத்தினருக்கு குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிப்பதற்கும் கொலுசு அணிவிக்கப்படுகிறது.

** உணர்ச்சி வசப்படுதல் என்பது எப்பொழுதும் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம். வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டு கொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது.

** பெண்களின் இடுப்பு பகுதியை வலிமைப்படுத்தவும் கொலுசு பயன்படுகிறது.