With this method you can soften your foot
ஆண், பெண் என இருபாலருக்கும் ஏற்படும் பாதவெடிப்பு பிரச்னை போக்கும் மருத்துவம்...
பாத வெடிப்பால் ரத்தக்கசிவு ஏற்படும். வெடிப்பில் தூசி புகுந்து துன்புறுத்தும். வலியை ஏற்படுத்தும். இதை பித்த வெடிப்பு என்றும் சொல்வது வழக்கம்.
பித்தத்தை சமன்படுத்தும், பாதவெடிப்பை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
இஞ்சி,
சீரகம்,
தனியா,
பனங்கற்கண்டு
செய்முறை:
இஞ்சி ஒரு துண்டு நசுக்கி போடவும். இதனுடன் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் தனியா, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
வடிக்கட்டி இந்த தேனீரை குடித்துவர ரத்தத்தை சீர்செய்யும். பித்தம் அதிகமாக சுரப்பதை தடுத்து பித்தசமனியாக விளங்குகிறது. பசியை முறைப்படுத்துகிறது. தோல் ஆரோக்கியம் பெற்று வெடிப்புகள் விலகிபோகும். பாதம் அழகுபெறும்.
