பாட்டி வைத்தியம்

** அகத்திக் கீரை மற்றும் மணத்தக்காளிக் கீரை இரண்டையும் அடிக்கடி சமைத்து சாப்பிட்டால் இரண்டு நாட்களில் வாய்ப்புண் குணமாகும்.

** அகத்திக் கீரையுடன் சின்ன வெங்காயம் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்.

** அல்லிக் கொடியை தேங்காய் எண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி தைலம் தயாரித்து தலையில் தினமும் தேய்த்து வந்தால் உடல் சூடு குறையும்.

** உகாமர இலை, வெள்ளரி விதை தலா 100 கிராம் எடுத்து, பொடி செய்து தினமும் காலை, மாலை இரண்டு நேரமும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி அடையும்.

** கரிசலாங்கண்ணிக் கீரை சாற்றில் 30 மில்லி நல்லெண்ணெய் கலந்து வாய் கொப்பளித்தால் குணமாகும்.

** கல்யாண முருங்கைக் கீரையுடன் ஊற வைத்த வெந்தயம் ஒரு ஸ்பூன் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி அடையும்.

** கிராம்பை நெருப்பில் சுட்டு அதை வாயில்போட்டு மென்றால் தொண்டைப் புண் ஆறும்.

** குப்பைக் கீரையுடன் பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

** குப்பைக் கீரையுடன் ஓமம், மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.

** கொய்யாப் பூவை கஷாயம் காய்ச்சி வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும்.

** சீரகம், சுக்கு, ஏலம், நெல்லி முள்ளி மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து அதன் மொத்த எடைக்கு சர்க்கரையைப் பொடி செய்து சேர்த்து தினமும் காலை உணவுக்குப் பின்னர் அரை ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டால் உடல் சூட்டால் ஏற்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.