with healthy food we can cure joint pain
இரண்டு எலும்புகள் இணையும் பகுதி மூட்டு இரண்டையும் இணைப்பது மூட்டு உறை. இரண்டு எலும்புகளின் நுனிப்பகுதிகளை ரப்பர் போன்ற குருத்தெலும்பு மூடி இருக்கும். இது மெத்தை போன்று மிருதுவானதாகவும் அதிர்ச்சியை தாங்கும் அமைப்பாகவும் உள்ளது.
மூட்டுகளில் பசை போன்ற திரவம் உள்ளது. இதை சைனோவியல் திரவம் என்கிறார்கள். இது குருத்தெலும்பை மசகுத்தன்மை கொண்டாக வைத்துள்ளது.
மூட்டுகள் பாதிப்பு அடையும் போது எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உரசி தேய்ந்து விடுகின்றன. தேய்ந்த எலும்புகள் உரசும் போது வலி உண்டாகிறது.
பொதுவாக மூட்டுகள் மூன்று வழிகளில் பாதிக்கப்படுகின்றன.
1.. முதலாவது தேய்மானத்தால் வருவது.
சர்க்கரை நோய் இளமையிலேயே முதுமையை கெடுக்கும். சாதாரணமாக 65-70 வயதுகளில் வரக்கூடிய தேய்மானம் இந்த நோயால் 40-50 வயதில் வந்து விடும்.
2.. இரண்டாவது வகை நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்படுவது.
காசநோய் கிருமிகள் போன்ற கிருமிகளால் வரக்கூடியது.
3.. மூன்றாவது வகை மூட்டு பாதிப்பு
தன்னைத்தானே தாக்கும் நோய்களில் ஒன்றால் வருவது. இந்த பாதிப்பு திடீரென வரலாம். விரைந்து சரியாகி விடும் அல்லது படிப்படியாக தீவிரமாகி தொல்லைகள் தரலாம்.
ஆரோக்கியமான உணவு முறை நோய் எதிர்ப்பு சக்தியை தர வல்லது. கொழுப்பு, உப்பு, இனிப்பு சத்துகள் அதிகமுள்ள உணவுப்பண்டங்களை தவிர்க்க வேண்டும்.
அசைவ உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். தானிய வகைகள், காய்கறிகள் பருப்பு வகைகள், பரிந்துரைக்கப்பட்ட பழங்கள் ஆகியவற்றை வேண்டிய அளவுகளில் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.
முறையான உடற்பயிற்சி மூட்டுகள் ஒரே நிலையில் இறுகி விடாமல் தடுக்கிறது. சரியாக இயங்க வைக்கிறது. மூட்டுகளை சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்தி மூட்டுகளுக்கு வலிமையை உண்டாக்கி வலியை குறைக்கும். வழக்கமான பணிகளை செய்ய உதவும்.
