Why should we eat fruits instead of snacks

* மனித உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு தேவையான எல்லாவித சத்துப் பொருட்களும் பழங்களில் உள்ளன. 

தினமும் தேவையான அளவு பழங்களை சாப்பிட்டால் புற்றுநோய்இருதய நோய் மற்றும் இதர நோய்கள் வரும் அபாயம் மிகவும் குறைகிறது.

*அல்சர் பிரச்னை உள்ளவர்கள் சிட்ரிக் அமிலம் உள்ள பழங்களை தவிர்த்து மற்ற பழங்களை உண்டால் அல்சர் விரைவில் குணமாகும்.

பசிக்கும்போது நொறுக்குத் தீனியாக சிப்ஸ்எண்ணெய் பலகாரங்களுக்குப் பதில் பழத்துண்டுகளை உண்ணலாம் உடல் எடை கூடாமல் இருக்கும். 

நீரிழிவு நோய் இருந்தால் அதிகம் மாவுச் சத்துள்ள வாழைப்பழம்பலாப்பழம்மாம்பழத்தை குறைவாக சாப்பிட வேண்டும்.

அன்னாசி பழத்தில் உடலுக்கு தேவையான பல என்ஸைம்கள் உள்ளன. தினமும் 400 கிராம் பழத்தை மூன்று நான்கு முறையாக சாப்பிடலாம்.ஆனால் இது உடல் சூட்டை அதிகப்படுத்தும் என்பதால் இப்பழத்தை குறைவாகவே எடுத்துக்கொள்ளலாம். 

அளவுக்கு அதிகமான உடல் பருமனை குறைக்க விரும்புவோர் வாரம் நாட்கள் பழங்களை மட்டும் சாப்பிட வேண்டும்.

*காலையில் ஆவியில் வெந்த உணவுகளை சாப்பிட்டு விட்டு 11 மணியளவில் ஒரு கப் பழ துண்டுகளை சாப்பிடலாம். இரவில் சிறு அல்லது குறு தானியங்களை கொண்டு சமைக்கும் தோசை, இட்லி, சப்பாத்தி போன்றவை அளவாக சாப்பிட்ட பின் பழங்களை சாப்பிடலாம்.