குழந்தைகள் தங்கள் தூக்க நேரத்தை குறைத்தால் அவர்களுக்கு உடல்நிலை சார் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று குழந்தைகள் ஆய்வியல் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

நிறைந்தளவான தூக்கம் 6 மாதம் முதல் 7 வயதுவரையான குழந்தைகளுக்கு மிகவும் அவசியமானது என்று, போதிய தூக்கம் கிடைக்காத குழந்தைகள், நரம்பியல் சார் பிரச்சினைகளை எதிர் கொள்ளவேண்டிய அபாயம் உள்ளதாக, அமெரிக்காவை சேர்ந்த குழந்தைகள் மனோத்தத்துவ நிபுணரான எல்சி தவரோஸ் தலைமையில் மேற்கொண்ட ஆய்வியல் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

குழந்தைகளின் தூக்கம் குறித்து, எல்சி தவரோஸ் 1046 குழந்தைகளை கொண்டு செய்த ஆய்வின் மூலம், குழந்தைகளின் போதிய தூக்க நேரம் பற்றிய பரிசீலனை அறிக்கையை அவர் சமர்ப்பித்துள்ளார்

குறித்த ஆய்வின் பிரகாரம் 6 மாத முதல் 2 வயதான குழந்தைகளுக்கு 12 மணி நேரமும், 3 முதல் 4 வயதான குழந்தைகளுக்கு 11 மணி நேர தூக்கமும், 5 முதல் 7 வயதான குழந்தைகள் 10 மணிநேரம் என தூங்கவேண்டுமென தெரிவித்துள்ளார்.

மேலும் போதிய தூக்க நேரத்தை கொடுத்தல் என்பது, குழந்தைகளின் உடல் நல மற்றும் மனநல ஆரோக்கியத்திற்கு ஏதுவாக அமையும் என குறித்த ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.