மூளை பலத்திற்கு

சுரைக்காய் சமைத்து விரும்பி உண்ணுங்கள். அது மூளைக்கு அதிக பலத்தைத் தரும். மேலும் அது வளர்ச்சி அடையும். நீங்கள் சமைப்பது எனில் சுரைக்காயை (கறியுடன் சேர்த்து) அதிகமாக சமையுங்கள். அது மனக்கவலையைப் போக்கி விடுவதோடு, நெஞ்சுக்குப் பலமும் தரும்”.

சிறுநீர் கோளாறுகள் நீங்க

பல காய்கறிகள் நீங்கள் பிரியமாக உண்டிருக்கிறீர்கள் என்றாலும் சுரைக்காயின் மீது தனிப்பட்ட விருப்பம் கொண்டு பிரியமாக உண்ணுங்கள். அதிலும் இறைச்சியில் சுரைக்காயைச் சேர்த்து சமைக்கப்பட்ட சால்னாவை கோதுமை ரொட்டியில் ஊற்றிச் சாப்பிட்டால், சிறுநீர் நன்கு வெளிப்படுத்தும். மேலும் சிறுநீர் கோளாறுகளை நீக்கும்.