Sudden fainting: திடீரென மயக்கம் வருவது எதனால்? அதற்கான தீர்வு என்ன?

நன்றாக இருக்கும் ஒரு நபர், திடீரென்று கூட்டத்தில் மயங்கி விழுவதை நாம் அதிகமாக பார்த்திருப்போம். இப்படியாக மயக்கமிடும் நபர்கள், அதிக நேரம் மயக்கத்திலேயே இருப்பார்கள். இவ்வாறான மயக்கம் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை நாம் இங்கு அறிந்து கொள்ளலாம்.
 

What causes sudden fainting? What is the solution?

இன்று பலருக்கும் பெரும்பாலான பிரச்சினைகளில் ஒன்றாக மாறியிருப்பது தான் மயக்கம் எனும் மயக்க நிலை. ஆம், நன்றாக இருக்கும் ஒரு நபர், திடீரென்று கூட்டத்தில் மயங்கி விழுவதை நாம் அதிகமாக பார்த்திருப்போம். இப்படியாக மயக்கமிடும் நபர்கள், அதிக நேரம் மயக்கத்திலேயே இருப்பார்கள். இவ்வாறான மயக்கம் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை நாம் இங்கு அறிந்து கொள்ளலாம்.

மயக்கம் ஏற்படுவது ஏன்?

இரத்த சர்க்கரை அளவு அதிகமாதல், இரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு காரணமாக திடீரென்று மயக்கம் வர வாய்ப்புகள் அதிகமுள்ளது. இருப்பினும், மது மற்றும் போதைக்கு அடிமையாவது தான் மயக்கத்திற்கு மிக முக்கிய காரணமாகும். பதட்டம் மற்றும் பயம் போன்ற உளவியல் காரணங்களும் மயக்கம் வருவதற்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன. மயக்கத்தில் உள்ள நபர்களின் கண் இமை திறந்தால், கண்கள் அங்கும் இங்கும் சுழல்வதை நம்மால் காண முடியும். ஆகையால் மயக்கம் ஏற்பட்ட உடனே மருத்துவமனைக்கு கூட்டிச் செல்வது நல்லது. 

நம் உடலில் நீர்ச்சத்து குறைபாடு இருப்பின், அது சுயநினைவின்மை பிரச்சனையை ஏற்படுத்தி விடும். இரத்தத்தில் திரவம் இல்லாத காரணத்தால், இரத்த அழுத்தம் குறைகிறது. இது திடீரென மயக்கம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

குறைந்த இரத்த அழுத்தமும் மயக்கத்திற்கு முதன்மை காரணம் ஆகும். உடலில் இரத்த ஓட்டம் சரியாக இல்லாத சமயத்தில், மயக்கம் ஏற்பட அதிக சாத்தியக் கூறுகள் உள்ளன. இந்த பிரச்சனையானது பெரும்பாலும் 65 வயதை கடந்த முதியவர்களிடம் காணப்படுகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு மயக்கம் ஏற்படும் பிரச்சனை அதிகமாக வாய்ப்புள்ளது. ஏனென்றால், நீரிழிவு நோயாளிகளுக்கு சிறுநீர் அதிகமாக வெளியேறும். இதன் காரணமாக நீரிழப்பு அதிகளவில் இருக்கும். இதன் காரணமாகவும் தலை சுற்றல் ஏற்பட்ட்டு, மயக்கம் வரும்.

Ring worm: படர்தாமரையால் அவதிப்படுபவரா நீங்கள்? இந்த ஒரு பேஸ்ட் போதும் உடனடி நிவாரணம் கிடைக்கும்!

இதயத் தசைகள் மற்றும் இரத்தக் குழாய்கள் வலுவிழந்து விடுவதால், மூளைக்குச் செல்லும் இரத்தத்தில் தடை ஏற்பட்டும் மயக்கம் வரும். இதனை இதய மயக்க நிலை என்று மருத்துவ ரீதியாகச் சொல்வார்கள். இருப்பினும், இந்தப் பிரச்சினை உடனே ஏற்படுவதில்லை. காலப்போக்கில் ஒருசில அறிகுறிகளை வெளிப்படுத்தி விட்டு, உச்சகட்ட அறிகுறியாகத் தான் மயக்க நிலை ஏற்படும் என்பதனால், நாம் முன்னெச்சரிக்கையாக இருந்தால் மேற்கொண்டு பிரச்சனைகள் வராமல் முன்கூட்டியே தடுக்க முடியும்.

மயக்கத்தை தவிர்க்க

தீடீரென ஏற்படும் மயக்கத்தை தவிர்க்க தியானம் மற்றும் யோகாசனத்தை செய்வது தான் மிகச் சிறந்த தீர்வாக இருக்கும் என உளவியல் நிபுணர்கள் அறிவுரைக்கின்றனர். இருப்பினும், மயக்கம் தெளிந்த பிறகு பயம் கொள்ளலாம் தைரியமாக இருப்பது நலம்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios