உடல் பருமன் தவிர்க்க முடியாத பிரச்சனையாக போல மாறிவிட்டது. அதை தவிர்க்க என்ன செய்யலாம்.

நம் ஊரில் பொற்கொடி என்னும் கரிசலாங்கண்ணியை அடிக்கடி பருப்பு, நெய் சேர்த்து பொரியல், குழம்பு கடைசல் ஆக உணவு பதார்த்தமாக உண்பது வழக்கம். இதனால் உடம்பில் தேங்கிய கெட்ட நீர்கள் வெளியாவதுடன் உடல் பலம் பெற்று மலச்சிக்கல் நீங்கி புத்திக்குத் தெளிவும், ஆரோக்கியமும் கிடைக்கும்.

உடல் கனமும், பருமனையும், தொந்தியையும் குறைக்க விரும்புபவர்கள் நாள் தோறும் பகல் உணவில் இரண்டு முதல் நான்கு வாரம் தொடர்ந்து உண்டுவர, நல்ல பலனுண்டு.

வாழைத் தண்டு, வெள்ளை முள்ளங்கி இவைகளைப் பொடியாக நறுக்கி, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து, பச்சையாக வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வர, அங்கங்கே விழும் சதை மடிப்புகள் மறையும்.

வாழைத் தண்டை வாரத்திற்கு இரண்டு முறையாவது உணவுடன் சேர்த்துக் கொள்ள உடல் பருமன் குறையும். மேலும் உடல் பலத்திற்கு காலையில் எழுந்ததும் தேன் 2 ஸ்பூன் எடுத்து கால் தம்ளர் பசும்பாலில் கலந்து பருகவும்.

இரவில கொண்டைக் கடலை 1 பிடி எடுத்துத் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் வேக வைத்து, அதனை வடிகட்டி அதில் சீமை அத்திப் பழம் 2, பசும்பால் அரை டம்ளர் கலந்து காய்ச்சி, கற்கண்டு சிறிது சேர்த்து, காலை நேரத்தில் பருகவும்.

ராகி, கோதுமை, புழுங்கல் அரிசி இவற்றை அரை கிலோ எடுத்து லேசாக வறுத்துப் பொடி செய்து, கஞ்சி செய்து, அதில் கால் ஸ்பூன் பொடியைக் கலந்து தினம் 1 வேளை பருகி வந்தால் நல்ல பயன் கிட்டும்.