What are the first steps to do if a fetus comes in? A...
நம் கண்ணுக்குள் எதாவது தேனும் தூசி, குச்சி, கண்ணாடித் தூள் போன்ற பொருள் விழுந்துவிட்டால், 20 நிமிடம் தொடர்ந்து கண்ணில் தண்ணீரை அடித்தபடி இருக்க வேண்டும்.
பெரிய சிரிஞ்ச் இருந்தால், அதில் தண்ணீரை நிரப்பித் தொடர்ந்து அடிக்கலாம். இல்லையென்றாலும், பரவாயில்லை; கைகளால் தண்ணீரை அள்ளி அள்ளித் தொடர்ந்து பாதிக்கப்பட்ட கண்ணில் அடித்துக்கொண்டே இருக்க வேண்டும்.
கையால் கண்ணைக் கசக்கக் கூடாது. விரலை விட்டு எடுக்க முயற்சிக்கக் கூடாது.
கண்களில் கண்ணாடி போன்ற கூர்மையான பொருள் குத்தியிருந்தால், கையை விட்டு எடுக்க முயற்சிக்கக் கூடாது. அப்படி எடுத்தால், கண்ணில் ரத்தக் கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனடியாக கண் நல மருத்துவரை அணுக வேண்டும்.
நேரடி வெளிச்சம், தூசி கண்களில் படாதவாறு, இரண்டு கண்களிலும் சுத்தமான துணி வைத்து, அதன் மேல் பிளாஸ்திரி போட்டு மூடிவிட வேண்டும்.
ஒரு கவர் அல்லது பேப்பர் கப் வைத்துக்கூட, கண்களை மூடலாம். அப்படியே கண் மருத்துவரிடம் போய்விட வேண்டும்.
