நமது உடலின் ஆரோக்கியத்தில் வாழைப்பழம் மற்றும் சீரகம் முக்கிய பங்கினை வகிப்பதால், வாழைப்பத்துடன் சீரகத்தை சேர்த்து சாப்பிடுவதன் மூலம் நமக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. மேலும் நமது உடம்பில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கு சீரகம் பெரிதும் உதவுகிறது.

காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் மற்றும் சீரகத்தை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால், அது நமது உடம்பில் கெட்டக் கொழுப்பினைக் குறைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கி, ரத்தக் கொதிப்பு மற்றும் ரத்த மூலம் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

சீரகத்தையும், உப்பையும் ஒன்றாகச் சேர்த்து மென்று சாப்பிட்டு, தண்ணீர் குடித்தால் வயிற்று வலி உடனே குணமாகிவிடும்.

சீரகம் மற்றும் கற்கண்டை ஒன்றாக கலந்து, அதை மென்று சாப்பிட்டு வந்தால், நாள்பட்ட இருமல் பிரச்சனைகள் தடுக்கப்படும்.

சீரகத்தை பொடி செய்து அதை சிறிதளவு தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால், சாப்பிடும் போது விக்கல் பிரச்சனைகள் ஏற்படாது.

சீரகத்தை நமது உடம்பு முழுவதும் அரைத்து தேய்த்துக் குளித்து வந்தால், உடம்பில் ஏற்படும் அரிப்பு பிரச்சனைகள் நீங்கும்.

சீரக பொடியை எலுமிச்சைச் சாற்றில் கலந்தும் அல்லது நல்லெண்ணெயில் சீரகத்தை போட்டுக் காய்ச்சி, எண்ணெய் தேய்த்து குளித்தாலும் பித்தம் நீங்கும்.