Want to stop hair fall and grow black hair
1.. வாரம் ஒருமுறையாவது முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து ஐந்து நிமிடம் ஊறியதும் குளிக்கவும்.
இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும்.
2.. இந்தக் கீரை நரை விழுவ தையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும்.
3.. தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் முடி உதிராது, அடர்த்தியாகவும் வளரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.
4.. நெல்லிக்காய்களை இரவில் தண்ணீரில் ஊறப்போட்டு, காலையில் அந்நீரில் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். செம்பட்டை முடியும் நிறம் மாறும்.
