Want to remove acne scars? This cooking material will make it easy ...

முகப்பரு வராதவர்களே இல்லையென்று சொல்லலாம், முகப்பரு வந்து மறைந்தாலும் அதன் தழும்புகள், தடயங்கள் சிலருக்கு மாறாமல் அப்படியே இருக்கும், 

இந்த தழும்புகள் நம் அழகை மறைத்து அசிங்கமான தோற்றத்தை நமக்கு ஏற்படுத்தும். இதற்கு சிறந்த தீர்வாக வெந்தயம் அமையும்.

முகப்பரு தழும்புகளை நீக்க இந்த வெந்தயத்தை எவ்வாறு பயன்படுத்தலாம்

** வெந்தயத்தை பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவி மாஸ்கு போல் பயன்படுத்தலாம், தழும்புகளின் மீது தடவி அவற்றை நீக்க முயற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்

**ஆலிவ் எண்ணெயை தொடர்ந்து முகத்தில் தடவி வந்தால் பருத் தழும்புகள் மறைவதோடு பருக்கள் மேலும் உருவாவதையும் தடுக்கும்.

**பன்னீருடன் சந்தனத்தை கலந்து பேஸ்ட் போல் உருவாக்கி அதை முகத்தில் மாஸ்க்காக தடவிக்கொள்ளவும். ஒரு மணிநேரம் கழித்து முகத்தை கழுவி கொள்ளவும்.

**சுடுதண்ணீரில் வெந்தயத்தை நன்றாக கொதிக்க வைத்து பின்னர் அதை அரைத்து குளிர்ச்சியான இடத்தில் வைக்கவும். இதை தழும்புகள் மீது தடவி 15 முதல் 20 நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவவும்.

**எலுமிச்சை சாற்றில் பஞ்சை நனைத்து அதை முகப்பருக்கள் மீது தடவவும். எலுமிச்சையும் கரும்புள்ளிகளை போக்கும் சிறந்த மருந்தாகும்.