டயட் இல்லாமல் உடல் எடையும் குறைக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்...

** அஸ்பாராகஸ் 

இந்த கொடி பலவித நன்மைகளை தருகிறது. உடல் எடையை குறைக்கும். நீர்சத்து அதிகம் நிறைந்த இந்த காய் அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் கொண்டுள்ளது. நச்சுக்களை வெளியேற்றும். உடலில் தங்கும் நச்சுக்களும் கொழுப்பை அதிகப்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

** அவகாடோ :

அவகாடோவில் அதிக நிறைவுறா கொழுப்பு உள்ளது அதோடு அதிக நல்ல கொழுப்பு அமிலங்களும் இருக்கிறது. இவை கொழுப்பை குறைக்கும் வேலையை செய்யும் சத்துக்களாகும். தினமும் இந்த பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

** பீநட் பட்டர் :

இது அதிக நல்ல கொழுப்பு அமிலங்களை கொண்டது. இவை கொலஸ்ட்ராலை குறைக்கும். ஆடையில்லாத பாலில் பீ நட் பட்டர் கலந்து ஸ்மூத்தி போல் செய்து குடிக்கலம்.

** புரோக்கோலி :

நீங்கள் உடல் எடை குறைப்பதில் தீவிரமாக இருந்தால் புரோக்கோலிதான் சிறந்த சாய்ஸ். வாரம் 4 நாட்கள் இதனை உபயோகித்தால் உடல் எடை வேகமாக குறையும்.

** பேரிக்காய் :

இதில் அதிக நார்சத்து உள்ளது. இவை நச்சுக்களை வேகமாக வெளியேற்றும். அதோடு உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்பை வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுத்தும்.

** தக்காளி :

தக்காளியை தவறாமல் மூன்று வேளை சமையலில் சேர்த்திடுங்கள். அதோடு தக்களி சூப் அல்லது ஜூஸ் செய்து குடிப்பதால் உடல் எடையை குறைந்துவருவதை காண்பீர்கள்.