Want a healthy body? Follow these simple ways to make the

1.. தினமும் 6 - 8 க்ளாஸ் தண்ணீர் குடித்தால் நல்லது. மிகவும் குளிர்ந்த நீரைக் குடிப்பதைவிடவும், காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை மிதமான சூட்டில் குடிப்பது நல்லது. உணவுக்குப் பின்னர் அல்லது எப்போதுமே சுடுத்தண்ணீர் குடிப்பதால் தேவையற்ற கொழுப்புகள் எளிதாக வெளியேற்றப்படும்

2.. கண்டிப்பாக தினமும் 15 நிமிடம் நமக்காக ஒதுக்கு உடற்பயற்சி செய்ய வேண்டும். காலை அல்லது மாலை சிறிது தூரம் வாக்கிங் போக வேண்டும். உடல் புத்துணர்ச்சிக்கும், தேவையற்ற டாக்சின்கள் உடலிலிருந்து வெளியேறவும் இது நல்லது.

3.. முடிந்தவரையில் நம் வேலையை நாம் செய்ய பழகிக் கொள்ளலாம், வீட்டு வேலைகளிலும் சரி, அலுவலக வேலையிலும் சரி. நம்மை நாம் ஆக்ட்டிவாக வைத்துக் கொள்ள இவை உதவும்.

4.. இரவில் மிதமான உணவு சாப்பிட வேண்டும். அதிகப்படியான உணவு ஜீரணமாக சிரமம் கொடுக்கும்.

5.. சாப்பிடவுடன் தூங்கக்கூடாது.

6.. தூங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பே தொலைக்காட்சியை நிறுத்திவிட வேண்டும்.

7.. சிறிது நேரம் இசை கேட்கலாம், அல்லது ஒரு குட்டி வாக் போகலாம்.