உணவில் பயன்படுத்தும் பொருட்களில் மஞ்சள் பல்வேறு மருத்துவ குணம் நிறைந்த அற்புத பொருளாகும். இந்த மஞ்சளை அன்றாட உணவில் சேர்ப்பதால எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? 

அதிலும் மஞ்சள் மற்றும் இந்தப் பொருட்களை கொண்டு தயாரித்த பேஸ்ட்டை நமது கண்களை சுற்றி தடவுவதால் வியக்க வைக்கும் நன்மைகளை நடக்கும்.

தேவையான பொருட்கள்

மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்

பால் – 1 கப்

மிளகுத் தூள் – 1/4 ஸ்பூன்

தேன் – 1 ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – 1/2 ஸ்பூன்

பொடித்த ஏலக்காய் – 1

பட்டை – 1 சிறிய துண்டு

செய்முறை

** முதலில் பாலை சூடேற்றி, அதனுடன் ஏலக்காய், பட்டை ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

** பின் அதில் மஞ்சள் தூள், மிளகுத் தூள், தேங்காய் எண்ணெய், தேன் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கலந்து வடிகட்டினால் மஞ்சள் பேஸ்ட் ரெடி.

பயன்படுத்தும் முறை

இந்த மஞ்சள் பேஸ்ட்டை கண்களின் மேல் மற்றும் கீழ் பகுதியில் தடவி, 5-8 நிமிடம் நன்றாக காய வைத்து, பின் சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.

நன்மைகள்

** மஞ்சள் கலந்த இந்த பேஸ்ட்டை கண்களின் மீது தடவுவதால், தலைவலி, வயிற்றுப்போக்கு, சளி, வயிற்றுப்புழு பிரச்சனை, வைரஸ் தொற்றுகள், சிறுநீரக தொற்றுக்கள் மற்றும் மூட்டுவலி போன்ற பல பிரச்சனைகளை குணமாக்கும்.

** மஞ்சள் ப்ரீ-ராடிக்கல்களை நடுநிலைப்படுத்தும் திறன் கொண்டதால், இது உடலினுள் உள்ள செல்களை ஆரோக்கியமாக பாதுகாத்து, புற்றுநோய் உருவாக்கத்துடன் தொடர்புடைய நொதிகளைத் தடுக்கிறது.

** மஞ்சள் மூளையின் ஆரோக்கியம் மற்றும் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது மூளையில் அமிலாய்டு உருவாக்கத்தை நீக்கி, அல்சைமர் நோய் ஏற்படுவதை தடுக்கிறது.

** நமது உடம்பில் ரத்தத்தில் உள்ள சர்க்கரையில் அளவைக் கட்டுப்படுத்தி, அதை சீரான அளவில் வைத்துக் கொள்ள மஞ்சள் பெரிதும் உதவுகிறது.

** மஞ்சளில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணியாகப் பயன்படுகிறது.

** மஞ்சள் பித்தநீர் உற்பத்தியை தூண்டி, வயிற்று உப்புசம், வாய்வுத் தொல்லை போன்ற பிரச்சனைகளை குறைத்து, செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.