Use this methods for shiny hair
** கனிந்த வாழைப்பழம் ஒன்று, இரண்டு டேபிள் ஸ்பூன் தேன், இரண்டு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் மூன்றையும் ஒன்றாகக் கலந்து பேஸ்ட் ஆக்கிக்கொள்ளுங்கள்.
கேசத்தின் வேர் முதல் நுனி வரை அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து அலசுங்கள். வாழைப்பழம் கூந்தலில் பிசுபிசுக்கப் பிடித்துக்கொள்ளும் என்பதால், அலசுவதில் பொறுமை அவசியம். வறட்சி நீங்கி, பொலிவு கூடுவதுடன் கூந்தலுக்கு ஈரப்பதம் கிடைக்கப்பெறும்.
** 3 – 4 டேபிள் ஸ்பூன் சுத்தமான தேங்காய் எண்ணெய் உடன் இரண்டு டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். அதை நேரடியாகச் சூடுபடுத்தாமல், கொதிக்கும் தண்ணீருக்குள் ஒரு பௌலில் வைத்து சூடுபடுத்தி, தலையில், கேசத்தில் தடவுங்கள்.
அரை மணி நேரம் கழித்து அலசுங்கள். தேன் கூந்தலை மென்மையாக்க, தேங்காய் எண்ணெய், கேசம் இழந்த கெரட்டின் தந்து மெருகேற்றும்; ஹேர் ஃபாலிக்கிள்களை வேரிலிருந்து வலுவாக்கும்.
** ஒரு கப் தயிர், கால் கப் ஆரஞ்ச் ஜூஸ், நான்கு டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ், கால் கப் தேங்காய்ப் பால், ஒரு முட்டை… அனைத்தையும் அடித்துக் கலக்கிக்கொண்டு, தலையில் தடவிவிட்டு அரை மணி நேரத்தில் மைல்டு ஷாம்பூ கொண்டு அலசுங்கள்.
ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை சாறு கேசத்திற்கு மினுமினுப்பு தர, தேங்காய்ப் பாலில் உள்ள விட்டமின் இ மற்றும் கொழுப்பு கேசத்திற்கு ஈரத்தன்மையும் ஊட்டச்சத்தும் தர, தயிரும் முட்டையும் கூந்தலைப் பட்டுப்போல் ஆக்கும்.
