நாம் உண்ணவும் உணவு தேவைக்கு அதிகமாக இருக்கும்போது, அது வருங்கால உபயோகத்திற்கு என கொழுப்பாக உடலில் சேமிக்கப்படும்.
நாம் இரண்டொரு நாள் உணவேதும் இன்றிப் பட்டினி கிடக்க நேரிட்டால் இந்தக் கொழுப்புதான் உடலுக்குத் தேவையான சத்தாக மாறி உதவி செய்யும்.
கொழுப்பின் முக்கிய பொறுப்பு சேமிப்பாக இருப்பதால், கொழுப்பு கலந்த உணவுப் பண்டகங்களை அதிகமாக விரும்பி உண்போரின் உடல் தேவைக்கு மீறிப் பருத்து விடுகிறது.
எண்ணெய், எண்ணெய் விதைகள், கொட்டைகள், பால், வெண்ணெய், நெய், இறைச்சிக் கொழுப்பு ஆகியவற்றிலிருந்து கொழுப்புச் சத்து கிடைக்கிறது.
சக்தியை ஊட்டும் உணவுப் பண்டம் எதிலும் ஒரு குறிப்பிட்ட அளவு கொழுப்பு கலந்தே இருக்கிறது.
ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு எந்த அளவு கொழுப்புச் சத்து தேவை என்பது குறித்து மருத்துவ அறிஞர்கள் இன்னும் ஒரு திடமான முடிவுக்கு வரவில்லை.
எனினும் நமது அன்றாட உணவில் ஒரு நூறு கிராம் அளவுக்குக் கொழுப்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
நமது உடலில் கொழுப்புச் சத்து குறைவதைவிட அதிகமாகும் போதுதான் உடல் பலவிதமான தொல்லைகளுக்கு இலக்காக நேரிடுகிறது.
கொழுப்புச் சத்து அளவுக்கு அதிகமாகச் சேர்ந்தால் இரத்த அழுத்தம், நீரிழிவு, இதயநோய் போன்றவை ஏற்படக் கூடும்.
ஆகவே கொழுப்பு விஷியத்தில் மிகுந்த எச்சரிக்கை வேண்டும்.
