01. அரிசி மாவுடன் தயிர் கலந்து சருமத்தில் தடவி மேல்நோக்கி மசாஜ் செய்ய வேண்டும். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு கழுவ வேண்டும்.
02.ஒரு டேபிள் ஸ்பூன் தயிருடன் ·ப்ரெஷ்ஷான எலுமிச்சைசாறையும், தேனையும் கலந்து சருமத்தில் தடவி சிறிதுநேரம் கழித்து கழுவ வேண்டும். இது முகத்தில் உள்ளகருமை நீங்க உதவும்.
03.உருளைக்கிழங்கைச் சாறெடுத்து அதை வெயிலினால்உண்டான கருமையில் தடவலாம். அதனுடன் எலுமிச்சைசாறு கலந்தும் தடவலாம்.
04.வெள்ளரிக்காயை கொழகொழவென அரைத்து அதனுடன்எலுமிச்சை சாறும், முல்தானிமட்டி கலந்து முகத்தில் 15நிமிடம் ·பேஸ்பேக் போட வேண்டும். வெயில் கருமையை நீக்குவதற்கு இது மிகவும் உகந்த முறை..
05.நல்லெண்ணை, ஆலிவ் எண்ணை, பாதாம் எண்ணைஆகியவற்றை 4: 1: 1 என்ற விகிதத்தில் கலந்து சருமத்தில் பூச வேண்டும். இருபது நிமிடம் கழித்து பாசிப் பயிறு மாவுகொண்டு இளம் சூடான நீரில் கழுவினால் சரும நிறம் பொலிவு பெறும் .
06.தயிருடன் தக்காளிச் சாறைக் கலந்து சருமத்தில் பூசி இருபது நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும்.
07.சிறிதளவு எலுமிச்சை சாற்றில் பாசிப்பருப்பு மாவும், தயிரும்கலந்து பூசி பதினைந்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
08.சிறிதளவு பாலில் மூன்று துளிகள் எலுமிச்சை சாறு கலந்துதோலில் தடவி பத்து முதல் பதினைந்து நிமிடம்ஊறவைத்து பின் வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.மேற்கண்ட முறைகளில் ஏதாவது ஒன்றினை தினமும் பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.-
