கல்லீரலில் கொழுப்பு சேராமலிருக்க வழிவகை செய்யும் 5 பழங்கள்- இதோ..!!
கல்லீரலில் ஏற்படும் பிரச்னைகளில் இரண்டு வகைகள் உள்ளன. அதிலிருந்து விடுபடுவதற்கு சில பழங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். குறிப்பிட்ட பழங்களை சாப்பிட்டு வருவது, பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை குறைக்கும்.
வயது அதிகரிக்க பல நோய்கள் ஒன்றன் பின் ஒன்றாக வர வாய்ப்பு உள்ளது. சர்க்கரை நோய் முதல் சிறுநீரகக் கோளாறு வரை பல உடல்நலப் பிரச்னைகள் நமது உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளால் ஏற்படுகின்றன. குறிப்பாக இன்றைய காலத்தில் கல்லீரலில் கொழுப்பு சேரும் பிரச்னையால் பலரும் அவதிப்படுகின்றனர். கொழுப்பு நிறைந்த உணவுகள், எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்களை அதிகம் சாப்பிடுவதால் கொழுப்பு கல்லீரல் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட சில பழங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுகுறித்து இப்போது ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
அவகாடோ
ஆல்கஹால் மற்றும் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் அவகாடோ பழத்தை சாப்பிட்டு வரலாம். இதை மருத்துவர்கள் பலர் பரிந்துரைக்கின்றனர். கல்லீரலில் சேரும் கொழுப்பை கரைப்பது மட்டுமில்லாமல், உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க அவகாடோ உதவுகிறது. இப்பழத்தில் பல்வேறு புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் இடம்பெற்றுள்ளன.
நாவல்
நாவலில் பல்வேறு வகைகள் உள்ளன. ஆனால் அனைத்து நாவல் வகைகளிலும் பொதுவான பலனாக இருப்பது இருதய நலன் தான். இதில் ஆண்டி ஆக்சிடண்டுகள் நிறைந்து காணப்படுகின்றன இவை கல்லீரலில் உள்ள அனைத்து வகையான பிரச்சனைகளையும் நீக்குகிறது. நீங்கள் ஏதேனும் கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், நாவல் பழங்களை கண்டிப்பாக சாப்பிடுங்கள். இந்தப் பழத்தில் இடம்பெற்றுள்ள சத்துக்கள் கல்லீரல் நோயை படிப்படியாக குறைத்துவிடும்.
வாழைப்பழம்
வாழைப்பழத்திலும் கொழுப்பு கல்லீரலில் சேராமல் தடுக்கும் சத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. வாழைப்பழத்தில் வைட்டமின் பி6, பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த பழங்களில் கார்போஹைட்ரேட்டுகளும் உள்ளன. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதன் மூலம், உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் கிடைத்துவிடும். கல்லீரலில் இடம்பெற்றுள்ள பிரச்னைகளும் நீங்கும்.
பலரும் அறிந்திராத ரோஸ் வாட்டரின் பயன்பாடுகள்..!! இதோ..!!
குருதிநெல்லி
இந்த பழத்தில் நிறைய ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இந்த பழத்தில் அந்தோசயனின்கள் நிறைந்து காணப்படுகின்றன. இது கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளுக்கு எதிராக போராடுகிறது. மேலும் இது அவ்வப்போது சாப்பிடுவதன் மூலம், உடலில் இருக்கும் உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும். திராட்சையில் வைட்டமின் சி, சிட்ரிக் அமிலம், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அது கல்லீரல் ஆரோக்கியத்துக்கும் பொருந்தும். ஆப்பிளில் அதிகளவு நார்ச்சத்து இருப்பதே அதற்கு காரணம், மேலும் ஆப்பிளில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இது கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கும். அதன்மூலம் நீங்கள் விரைவிலேயே கல்லீரலில் கொழுப்பு சேரும் பிரச்னையில் இருந்து விடுபடலாம். ஆனால் ஆப்பிளை சாப்பிடும் போது, சுடு தண்ணீரில் நன்றாக கழுவி சாப்பிடுங்கள். அப்போது தான் அதிலிருக்கும் மெழுகு வெளியில் வரும்.