Asianet News TamilAsianet News Tamil

சர்க்கரை நோயை விரட்ட கோவைக்காயை இப்படி சாப்பிடுங்க…

To dispel sugar eat tindora
To dispel sugar eat tindora
Author
First Published Jul 21, 2017, 1:17 PM IST


சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. நம்முடைய உணவுப் பழக்க முறைகளில் கூடுதல் கவனம் செலுத்தினால் நீரிழிவு நோய் வராமல் தப்பித்துக் கொள்ளலாம்.

சாதாரணமாக எல்லா காய்கறி அங்காடிகளிலும் தாராளமாகக் கிடைக்கக் கூடியது கோவைக்காய்.

துவர்ப்புச் சுவையுடைய இந்த கோவைக்காயில் பொறியல், வற்றல், கூட்டு, சாம்பார் செய்து உணவில் சேர்த்து கொள்வதுண்டு. மற்றும் கோவைக் காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு.

சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன் மோர், மிளகு பொடி, சீரகப் பொடி, இஞ்சி சிறிது சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து விட்டால் அவ்வளவு தான் கோவைக்காய் பச்சடி தயார்.

இதனை வாரம் 2 நாள் பகல் உணவில் சேர்த்தால் வாய்ப் புண் குணமாகும். நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் சேரும் சர்ககரை அளவைக் கட்டுப்படுத்தும்.

ஆனால் நிறைய பேர் பாகற்காயை ஒதுக்குவது போல் கோவைக் காயையும் உணவில் சேர்த்துக் கொள்ளாமல் ஒதுக்கி விடுகிறார்கள். நாக்கு சுவையை மட்டுமே கருதாமல் உடல் நலத்தையும் கருத்தில் எடுத்துக் கொண்டால் எல்லா உணவுகளும் விருப்பமுடையதாகத் தான் ஆகும்.

இதனைப் பொதுவாக எல்லோருமே சாப்பிடலாம். பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.

பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பி விட்டாலே வாய்ப்புண் ஆறிடும். வயிற்றுப் புண் இருப்பவர்கள் வாரம் 2 நாள் கோவைக்காயை சேர்த்துக் கொள்ளலாம்.

கோவைக்காயை பீன்ஸ் போல பொறியல் செய்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் சேர்த்து அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios