Tips for lips

உதடுகளை வசீகரமாக அழகுபடுத்த விரும்புபவர்கள் அழகு சாதன பொருட்களை மட்டும் பயன்படுத்தாமல் வீட்டு உபயோகப்பொருட்களை பயன்படுத்தியே உதடுகளை பொலிவாக்கலாம்..

*ஆலிவ் ஆயில் ஸ்கினிற்கு மிகவும் நல்லது. எனவே ஆலிவ் ஆயிலுடன் சர்க்கரை கலந்து உதட்டில் பூசி வந்தால் இறந்த செல்கள் வெளியேறி உதடுக்கு பொலிவு கிடைக்கும்.

* ஈரத்தன்மையின்றி உலர்ந்து காணப்படும் உதடுகளுக்கு தேனை பயன்படுத்தலாம். தேனுடன் எலுமிச்சை சாறு, சர்க்கரை கலந்து தொடர்ச்சியாக பூசி வந்தால் உதடுகள் மென்மையுடனும்,பளபளப்புடனும் ரோஸ் நிறத்துடன் காணப்படும்.

* உதடுகள் பளிச்சென்று தோற்றமளிக்க புதினாவையும் பயன்படுத்தலாம். புதினாவை சாறு பிழிந்து சர்க்கரையுடன் கலந்து உதட்டில் பூசி வந்தால் உதடுகள் பளபளக்கும்.
* குங்குமப்பூ உதட்டின் கருமை நிறத்தை மாற்றும் தன்மைகொண்டது. பாலில் குங்குமப்பூவை சிறிது நேரம் ஊற வைத்து, அதனுடன் சர்க்கரை சேர்த்து உதட்டில் பூசி வந்தால் உதடுகள் கருமை நிறம் மாறி அழகாகும்.