நம் உடல் மிகவும் சோர்வடைந்து, தன்னிலை மறந்து மயக்க நிலைக்கு கொண்டு செல்லும் மூன்று வியாதிகள் காய்ச்சல், இருமல், ஜலதோசம். இந்த மூன்று வியாதிகள் வந்தவுடன் மருத்துவரிடம் சென்று அவர் கொடுக்கும் மருந்துகளைத் தின்றாலும், இவை நம்மை நீங்க ஒரு வாரம் மேல் எடுத்துக் கொள்ளும்.

இவற்றைப் போக்க இயற்கை முறையில் மருத்துவம் உண்டு. இந்த மூன்று வியாதிகளை விரட்ட மூன்று மருந்துகள். சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் இடித்து வைத்துக்கொண்டால் காய்ச்சல், இருமல், ஜலதோஷம் முதலியவற்றின்போது இவற்றைக் கஷாயமாகப் போட்டு அருந்தினால் உடனே குணம் கிடைக்கும்.

மற்ற நாட்களில் சுக்கு காபி அல்லது மல்லி காபி தினமும் ஒரு வேளை அருந்திவர வேண்டும். இதனால் கொலஸ்ட்ரால் பிரச்சனை தினமும் கட்டுப்பாட்டுக்கு வரும்.