This type of disease affected mens

கோடைக் காலங்களில் தோலில் ஏற்படும் நோய்களில் முதன்மையானது படர் தாமரை. பூஞ்சையினால் ஏற்படக் கூடியது இது. பெண்களை விட ஆண்களை அதிகம் தாக்கும். 


பிறப்புறுப்பில் துவங்கி, தொடை இடுக்குகளில் பரவும் இந்த நோயால் சொறியப்படும் இடம், சினைப்புகள் சிவந்திருக்கும். இந்த நோய், வேதனையான அரிப்பை பல முறை உண்டாக்கும். 
படர் தாமரை பரவிய இடங்களில், தோல் நிறமாற்றம் அடைந்து அடர் கறுப்பு நிறமாகிவிடும். தீராத அரிக்கும் தன்மை உடையது. இதை சொறிந்துவிட்டால் அதிலிருந்து வெளியாகும் நீர்மத்தினால், மற்ற பாகங்களுக்கும் பரவும்.


படர் தாமரை, தலையில் தாக்கினால், அரிப்பை ஏற்படுத்தும். இதனால் தலைமுடி பாதிக்கப் பட்டு, சிவப்பு படர்தாமரை வளையங்கள் தோன்றி நமைச்சல் அதிகரிக்கும். உடலில் எங்கு வேண்டுமானாலும், இந்த படர்தாமரை வரும்.பாக்டீரியா தாக்குதல்,நகத்தில் சிதைவை ஏற்படுத்தும். கால் விரல் நகங்களில் அதிகம் வரும். அவ்வப்போது கால் விரல்களை கவனித்து நகங்களை வெட்டிவிட வேண்டும். படர் தாமரை ஒருவருக்கொருவர் தொற்றிக் கொள்ளும் சரும வியாதி. அந்த நுண்ணுயிர்களுக்கு பிடித்த ஈரமான இடம் கால் விரல்களின் இடுக்கு. இது, முதலில் சிறு பகுதியில் தாக்கி, பாதம் முழுவதும் புண்ணாகும்.
படர் தாமரை பரவும் இடங்கள் அக்குள், பிறப்புறுப்பு, தொடை, தொடை இடுக்குகள், கால் நகங்கள், கழுத்து மடிப்பு கால் இடுக்குகள்,பெண்களுக்கு மார்பகங்களின் கீழ் சதை மடிப்புகளில் வரும். 
படர்தாமரை தாக்காமல் இருக்க, காலை, இரவு என, இரு வேளைகளிலும், சுத்தமான நீரில் குளிக்க வேண்டும். அழுக்கு துணிகளை பயன்படுத்தக் கூடாது. சலவை செய்த துணிகளையே பயன்படுத்த வேண்டும். இவற்றை பின்பற்றினால் படர்தாமரையை தடுக்க முடியும். ஆங்கில மருத்துவத்தில், இதற்கு சிறந்த களிம்புகளும் மாத்திரைகளும் உள்ளன. இதோடு பாதிக்கப்பட்டவர் பயன் படுத்திய சோப்பு, சீப்பு, டவல், உள்ளாடைகள் போன்றவற்றை பயன்படுத்த கூடாது. அதுமட்டுமல்லாமல் பயன்படுத்திய துணிகளை சுடு தண்ணீரில் அலசுவது நல்லது.